பக்கம்:தனி வீடு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தனி வீடு

மூன்றையும் போலவே வேறு வகையான மூன்றை நிகனத் துப் பார்த்தால் அவை பற்றிய துக்கந்தான் பெரிதாக இருக்க வேண்டும். எல்லா உறவினர்களையும் விடப் பெரிய உறவினன் ஆகிய பரமேசுவரன நாம் பிரிந்திருக்கிருேம்; அது எவ்வளவு பெரிய துயரத்தை உண்டாக்க வேண்டும்? நமக்கே உரிமையான முத்தி என்னும் செல்வம் நமக்குக் கிடைக்காமல் இருக்கிறது, அதல்ை எத்தனே துக்கம் உண்டாக வேண்டும்? எல்லா நோய்களையும்விடக் கடுமை யானது உடம்பு வரும் நோய் ஆகிய பிறவி. பல காலப்ாக அந்தப் பிணி நம்மைப் பற்றிக்கொண்டிருக்கிறது; அந்தப் பிணியை கினேந்து பார்த்தால் எல்லாவற்றையும்விடப் பெரிய துயரம் உண்டாகும். பிறவியாகிய பெரும் பிணி யைப் பெற்றும் அதைப்பற்றி காம் கினேப்பது இல்லை. இறைவகிைய பெரிய உறவைப் பயன்படுத்திக்கொள் ளாமல் இழந்து கின்றும் துன்புறுவது இல்லை. முத்திச் செல்வத்தைப் பெருமல் உண்மையான வறுமையை அடைந்தும் நாம் புலம்புவது இல்லை. -

- இதற்குக் காரணம் நாம் மாயா விசோதத்தில் ஈடுபட் டிருப்பதுதான். நூறு ரூபாய் போய்விட்டதே' என்று துக்கப்படத் தெரிகிறது. நமக்குரிய வீடு போய்விட்டதே!. என்று துன்புறத் தெரிகிறது, ஒரு யூதரும் அறியாத் தனி வீட்டில் இருக்கவில்லையே' என்று துன்புற வகை இல்லை. நம்மை வளர்த்து எடுத்துப் பாலூட்டிய தாய் மறைந்து போனல் புலம்புகிருேம்; வாடுகிருேம். ஆல்ை இந்த உயிருக்குத் தாயாகிய ஆண்டவனேச் சிறிதேனும் கினேப் பது இல்லை; அவனைப் பிரிந்து வாழ்கிருேமே என்று

வருத்தம் அடைவது இல்லே.

இப்படியெல்லாம் உண்மையான துக்கம் இல்லாமல் பொய்யான துக்கங்களை ஏற்றுக்கொண்டு வாழ்வதற்குக் காரணம் இந்த மனமே, துக்கப்படுவதும் இதுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/42&oldid=575853" இலிருந்து மீள்விக்கப்பட்டது