பக்கம்:தனி வீடு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் so வெள்ளம் வந்த பிறகு அதே இடத்தின்மேல் போகையில் அந்தக் கவலைகளுக்கு இடமே இல்லாமல் சுகமாகப் போகிருேம். காரணம், அப்போது மேடுபள்ளமற்ற சமமான வெள்ளம் பரந்ததுதான். - -

உள்ளக் கமலம் விரிந்து அதனூடே ஆனந்தத் தேன் ஊற்ருகத் தோன்றி மேலே பெருகிப்பரவும்போது அதற்கு முன்னலே வெவ்வேருக்க் கண்ட் கிறங்களும், உருவங் களும் ஒன்ருகிவிடும். புலன் நுகர்ச்சி எல்லாம் மேடு பள்ளம் இல்லாமல் மட்டமாகிவிடும். அவன் எல்லா வற்றுக்கும் மேலே மிதப்பான். அந்த இடத்தை விட்டுப் போய்விடுவான் என்பது அல்ல. சரீரம் இருக்கும் மட்டும் இந்த உலகத்தில் இருக்கத்தான் வேண்டும். கரைக்குச் சென்றவனும் ஆற்றுப் படுகையில் இருக்கிற கண்ணுடி, முள் முதலியவற்றுக்கு அஞ்சமாட்டான். ஆற்றில் வெள்ளத்தின்மேல் இருக்கிறவனும் அஞ்சமாட்டான். அப்படியே பிரபஞ்சத்தில் இருந்தாலும் செயல் மாண்டு ஒழிந்து பரமானந்தத்தில் மிதந்தால் அவனுக்கு ஏனேய வர்கள் காணும் இன்பதுன்ப வேறுபாடுகள் இருப்பது இல்லை. அந்த ஆனந்த வெள்ளம் புவனத்தை ஏற்றிவிடு கிறது. பிரபஞ்ச வாசனே அத்தனையும் அற்று கிற்கிற கிலே அது. - - - -

புவனம் ஏற்றுதல். புவனம் ஏற்றித் தத்திக் கரை புரளும் - - - பரமானந்த சாகரத்தே.

சாலைகளில் நிழலுக்குச் செடி நடுவதை நாம் பார்த் திருக்கிருேம். செடி நடும்போது ஆடுகள் கடிக்காமல் இருக்கவேண்டுமென்பதற்காகச் சுற்றிலும் இரும்பின. லேயோ, முள்ளாலேயோ வேலி அமைப்பார்கள். நட்ட செடி பெரிய மரமாகி வளர்ந்துவிடுகிறது. அப்போது அங்கே வேலி இருக்குமா? அது அற்றுப் போய்விடும். அது போலவே இந்த உள்ளக் கமலத்தில் தோன்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/79&oldid=575890" இலிருந்து மீள்விக்கப்பட்டது