பக்கம்:தனி வீடு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் T 1.

டார். பின்பு செயல் மாண்டது. ஆனந்த ஊற்றுப் பெரு கியது; பரமானந்தக் கடலாகப் பெருகிவிட்டது. பெருகின போது மறுபடியும் அங்கே அந்த ஆறுமுகத்தைக் கண்டார். சிறிய விதையிலிருந்து மிகப்படர்ந்து சென்ற மரத்தில் மறு படியும் விதையைக் கண்டேன் என்று சொல்வது போல இருக்கிறது. இது. இரண்டு விதைகளும் ஒன்று ஆகா. இந்த விதையினுடைய விளைவு அது. இந்த விதையைப் பார்க்கிறவன் மரமாகி வளர்ந்த பிற்பாடு வரும் விதையை ஒரு விதமாக ஊகிக்கலாமே தவிர நேரே பார்க்க இயலாது. பார்க்கவேண்டுமானல் அவ்வளவு காலம் காத்து கின்று வளர்கிற வரைக்கும் முயற்சியைச் செய்து வரவேண்டும்.

அப்படி, பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள் களுமாய்த் தித்தித்திருக்கும் அமுது கண்டேன்' என்று அருணகிரியார் சொல்வதை நாம் இப்போது திருக்கோயி லில் பார்க்கிற உருவத்தைச் சொல்வதாக எண்ணக் கூடாது. அது எப்படி இருந்தது என்று அடையாளம் சொல்வதற்காக நமக்கு அருணகிரிநாதர் இந்த வகையில் சொன்னர். அவர் கண்டபடி நாம் காணவேண்டுமானல் அவரைப்போல நாமும் செயல் மாண்டு அடங்கி கிற்க வேண்டும். -

இங்கே அருணகிரிநாதப் பெருமான் நமக்குப் பயன் படுகிற ஒரு செய்தியைச் சொல்கிருர். கோயிலுக்குள் நாம் காண்கிற உருவமே வித்தாக நின்று பின்னலே வேறு வகையில் அநுபவ கிலேயில் தோன்றும் என்பதை அவர் புலப்படுத்துகிருர். புவனத்திற்கு நாம் அடங்கி நிற்கும் போது ஆறுமுக நாதனைப் பார்க்கிருேம். அருணகிரியாரும் அவனைப் பார்த்தார். புவனத்தை அடக்கி நிற்கின்ற அந்தச் சமயத்திலும் ஆறுமுக காதனை நாம் காணலாம். இங்கே கண்ட ஆறுமுகநாதன் அங்கேயும் வந்து நிற்கிருன், வேறு வகையில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/81&oldid=575892" இலிருந்து மீள்விக்கப்பட்டது