ளைக்கூடச் சரிவரப் புரிந்துகொள்ளும் ஆற்றலற்ற அவன், அவனை ஊடுருவி நிற்கும் அப்பேராற்றலை உணர்தல் இயலாது. அவன் அதுபற்றி ஒரளவு கூறுவதானாலும், அதனை மாறாகவே உணரமுடியும். விழிகளின் வேலைத் திறனையே சரிவரப் பெறாத குருடன் கதிரொளியின் வண்ண வீசல்களை யாங்கன் அறிவான்? ஆனால் தனக் கமைந்த பார்வைக் குறைவால் உள்ளோடி நிற்கும் இருளுக்கு மாறாக ஒரு பெருஞ்சுடர் பொலிந்து கொண்டிருப்பதை அவன் நம்புகின்றான். இதுபோலவே பேதை இறையாற்றலை நம்புகின்றான். நம்பாத முழுப் பேதையைவிட அதனை நம்புகின்ற அரைப் பேதை ஒரு படி உயர்ந்தவன் தானே?
தன் அக ஆற்றலை ஒருவன் உணரும்பொழுது அந்த ஆற்றலின்மேல் அமைந்த பருப் பொருள்களான கருவிகள், சமயங்கள், தொன்மங்கள் அவற்றில் வரும் தொடர் மொழிகள், கோயில்கள் யாவும் பயனற்றுச் சாய்ந்து விடுகின்றன. குருடன் தன் கையுணர்வால் நுண்பொருள்க ளின் சாயல் போன்று அமைந்த படிவங்களைத் தொட்டு அறிகின்றான். பார்வை கிடைத்தவுடன், கையால் நீவி அறிகின்ற அப்படிவங்கள் பயனற்று, அவற்றின் உண்மையான மூலத்தோற்றங்களையே நேரில் கண்டு அறிவால் உணர்கின்றான். குழந்தை முதலில் ஒவ்வோர் எழுத்தாகக் கூறிக்கற்று, நாளடைவில் ஒரே பார்வையில் ஒவ்வொரு சொற்றொடராகக் கூட்டிப் படிப்பதுபோல், பருப் பொருள் தோற்றப் பழக்கம், நாளடைவில் உணர்வின் பழக்கமாக மாறி, அதனுள் ஊடுருவிய உண்மையை ஒருவன் கண்டு கொள்ள உதவுகின்றது. அக்கால் அவன் ஒவ்வோர் எழுத்தாகப் படிக்கத் தேவையில்லை. பார்த்தளவிலேயே அதன் முழுத் தோற்றத்தையும் உணர முடியும்
நமக்கு முன்பாக வாழ்ந்த பேரறிஞர்தம்மை நாம் தொடர வேண்டுவதில்லை. அவர்தம் உணர்வின் எல்லைக்கு மேல் நாம் நம் உணர்வைச் செலுத்திக்கொண்டு போக