பக்கம்:தன்னுணர்வு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10

வேண்டும். தரையிலிருந்து நம்மை ஒருவன் தூக்கி அவன் தலை வரை உயர்த்துவானானால் நாம் நம் தலைக்குமேல் என்ன இருக்கின்றது என்பதையே காண வேண்டுமல்லாது, நம்மைத் தூக்கி நிறுத்தியவனை நாம் குனிந்து பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. நமக்கு முன்னால் உள்ள அறிஞர்களும், சமயத் துறவிகளும், நம்மை இத்தன்மைக்குக் கொண்டு வந்துள்ளனர். இனி நாம் அவர்கட்கு மேல் நம்மை நடத்திக் காட்டவேண்டும். இந் நிலையில் அவர்களைப் பற்றி நாம் பாராட்டிக் கொண்டிருக்கத் தேவையென்ன?

மாந்தன் மருண்ட பார்வையால், நலிந்த பேச்சையே பேசுகின்றான். நாம் இப்படித்தான் எண்ணுகின்றோம், இப்படித்தான் இருக்கின்றோம் என்றிராமல், ஒரு முனிவரையும் ஓர் அறிஞனையும் உவமை காட்ட வேண்டியதில்லை

ஒரு தாமரை மலரோ, ஒரு குருவியோ, அல்லது ஒரு கோழிக்குஞ்சோ தங்கட்கு முன்பிருந்த தம் முன்னோரைப் பற்றி எண்ணி தம் வாழ்க்கையை மலர்த்துவதில்லை. தங்களைத் தாங்களாகவே எண்ணி வாழ்கின்றன. நமக்குள்ள ஆற்றலைக் கொண்டு நாமாக நம்மை நாம் நடத்த வேண்டுமேயல்லாமல் வேறு ஒன்றின் போலியாக நம்மை நாம் எண்ணிக் கொள்ளவோ நடத்திக்கொள்ளவோ வேண்டுவதில்லை. மலர்ந்து மணம் வீசும் மலரில், அதைவிட வேறு ஆற்றலில்லை. அதன் ஆற்றலை அது முழுமையும் நம்மை எவ்வளவுக் கெவ்வளவு, நாமாகச் செய்துகொள்ளல் முடியும் என்பதைப் பொறுத்தே இருக்கின்றது. ஒரு கனியின் முழுமை கனியே. ஒரு வேரின் முழுமையும் அந்த வேரே; மாத்தனின் முழுமையும் மாந்தனே. மணமின்றி வெறுந் தோற்றத்தை மட்டுமே காட்சியளவில் காட்டுகின்ற ஒரு மல்லிகை மலரை நாம் பார்க்க முடியாது. அப்படிக் காட்டும் ஒன்றும் மல்லிகையாகாது. அதுபோல் தன்னுள் பொதிந் துள்ள மனத்தை முழுமையாக மலர்த்தி, மணம் வீசச் செய்யாமல் வெறும் தோற்றத்தையே காட்டிக்கொண்டிருக்கின்ற ஒரு மாந்தனும், மாந்தன் ஆகிவிட முடியாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தன்னுணர்வு.pdf/22&oldid=1162246" இலிருந்து மீள்விக்கப்பட்டது