பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106 தமிழகக் குறுநில வேந்தர் பிறவும் புறநானூறு கற்றார் பலரும் அறிந்தனவே. அத் தகைப் பெரியார் பிறந்து சிறந்த பிசிர் என்னும் ஊர் இச்சேதுநாட்டு அலங்காரனல்லூர் (அலங்கானுர்)க்கு அடுத்துள்ள பிசிர்க்குடி என்பதாகும். நல்லங்தையார் என்பார் நற்றிணை 211ஆம் பாட்டுப்பாடியவர். இவருடையவூர் கோட்டியூர். து சிவகங்கையைச் சார்ந்த பெரிய திவ்யஸ்தல மென்பது பலரும் அறிந்ததே இத் திருப்பதியைப் பாடியருளிய ஆழ்வார் திருமங்கைமன்னர், 'கோவையின் றமிழ் பாடுவார் தொழுந் தேவதேவன் திருக்கோட்டியூர்' என்று சிறப்பித்தருளுதலான் இவ்வூர்க் கண் அகப்பொருட்டமிழ்பாடும் புலவ ரிருந்தனரென்று குறித்தருளினராவர். இவ்வூரே "அல்வழக் கொன்று மில்லா வணிகோட்டியர்கோ னபிமான துங்கன்,' 'நளிர்ந்த சீல னயாசல ன பிமான துங்கன’ என்று பெரியார் சிறப்பித்த செல்வநம்பிக்கும், அவர்வழியினராய் பூரீவைஷ் ணவபர மாசாரியராகிய பூரீராமாநுஜமுனிவரால் பதினேழ் தரம் சென்று வழிபடப்பெற்ற திருக்கோட்டியூர்கம்பிக்கும் அவதாரஸ்தலம் என்பது பலரும் அறிவர். திருக்கோட்டி யூர் நம்பிகள் தனியன் வருமாறு: "விசயன் வினையொழித்த மெய்ப்பொருளைப் பூதுார் வசையின் முனிக்களித்த வள்ளல் - திசைகமழும் தேமலர்ப்பூஞ் சோலைத் திருக்கோட்டி யூர்நம்பி தாமரைப்பூந் தாளே சரண்” அள்ளுர்கன் முல்லையார் குறுந்தொகை 32 ம் பாட்டும் நெடுந்தொகை 40-ஆம் பாட்டும் பாடியவர். இவ ரள்ளுர் இச் சேது நாட்டுச் சிவகங்கையைச் சார்ந்துள்ளது. வெள்ளைக்குடிநாகனார் நற்றிணை 1 8-ஆம் பாட்டு பாடிய வர். இவரூர் சேது நாட்டுத் திருவேகன்பற்றுச்சேகரத் துள்ளது. ஒக்கூர் மாசாத்தியார் பாடியன குறுந்தொகை யினும் நெடுந்தொகையினும் பலபாடல்க ளுள்ளன. இவருடைய ஒக்கூர் மேற்காட்டிய கோட்டியூர்ப்பக்கத்தே யுள்ளது. , பதினெண்கீழ்க்கணக்கினு ளொன்றாகிய