பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

தமிழகக் குறுநில வேந்தர்

எனச் சோழன் படைத்தலைவனான பழையனைக் (அகம். 44) குறுநிலமன்னனாகக் கூறியதனானே அறியலாவது.

இவ்வாறு மூவேந்தர்க்கும் பெருந்துணைவராய் அம்மூவர் படைவீரருங் குறுநிலமன்னருமாகிய மூவகை மறவருள், இச்சேதுபதிகள் சோழன் மறவராவர். இது பற்றியே இவரைச் செம்பி நாட்டு மறவர் என வழங்குவர். செம்பியன்-சோழன். பாண்டியன் நாடு பாண்டி நாடு என ஆயது போலச் செம்பியன் நாடு செம்பி நாடு என ஆயது. ஒருதுறைக் கோவையிலும் ரகுநாதசேதுபதியை செம்பி நாடன் (60, 82) செம்பியர் கோன் (203) செம்பி நாட்டிறை (208) செம்பியர் தோன்றல் (218) என வழங்குதல் காண்க.

இச்சேதுபதிகளை இரவிகுலத்தவரெனக் கூறுதலும் அச்சோழர் குலத்தையே பற்றி வந்ததாகும். இவர் சாசனங்களில் உள்ள விருதாவளிகளில் முதற்கட் “சோழ மண்டல பிரதிஷ்டாடகன்” “அகளங்கன்” எனவரும் விருதுகளும் இவர் சோழர்பாற் பெற்ற படைத்தலைமை குறிப்பனவாம். சோழன்மறவராகிய இவர் சோணாட்டைவிட்டுச் சேது தீரத்திற் குடியேறியகாலம் இஃது என நன்குசேறப் படாவிடினும், திரிபுவனதேவன் எனப் பெயர் சிறந்த குலோத்துங்க சோழன் காலத்துக்குப் பின்னேதான் இவர் ஆங்குக் குடியேறியதாகுமென்பது சில ஏதுக்களான் அனுமானிக்கப்படுகின்றது.

குலோத்துங்க சோழன் கி.பி. 1064-ல்[1] பாண்டி நாடாண்ட வீரபாண்டியனென்பவனைப் போர் தொலைத்துப் பாண்டி நாட்டைத் தன்னடிப்படுத்துத் தன் தம்பியாகிய கங்கை கொண்டான் சோழர்க்குச் சுந்தர பாண்டியன் என்னும் பேர் தந்து அப்பாண்டிநாடாளும் அரசுரிமையைக் கொடுத்தனனாதலால், அக்காலத்தே அப்

  1. Dr. Caldwell's History of Tinnevelly. Page. 27