பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

127

அவர்களுடைய கொச்சைக் கன்னடம் நம் காதைத் துளைக்கும். சிறிய உருவமும், ஒல்லியான உடற்கட்டும், மா நிறமான மேனியும் உடையவர்கள். ஆண்கள் வண்ணக் கரையிட்ட வெள்ளாடையை இடுப்பில் உடுத்துக் கொள்கின்றனர். மேலே சொக்காயணிந்து, அதற்கு மேல் தடித்த கோட்டு (waist coat) அணி கின்றனர். பெண்கள் மார்பை மூடும்படி அக்குளைச் சுற்றிக் குறுகலான மேலாடை யணிகின்றனர். கீழே சேலை உடுத்துக் கொள்கின்றனர். தலையில் எப்பொழுதும் ஒரு துணியைச் சுற்றிக் கொள்கின்றனர். ஆண்களும் பெண்களும் எப்போதும் மலர்ந்த முகத்துடன் காட்சியளிக்கின்றனர்.

பிரிவுகள்

படகர்கள் ஆறு பிரிவினராகப் பிரிந்து வாழ்கின்றனர். உடையார், ஆருவா, அதிகாரி, கனகர், படகர், தொரியர் என்பவையே அப்பிரிவுகள். உடையார் பிரிவினர் மற்ற ஐவரையும்விட உயர்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். இன்று கூட மைசூர் நாட்டில் வாழும் செல்வர்கள் உடையார் என்ற பெயரால் தங்களை அழைத்துக் கொள்கின்றனர். மைசூர் மன்னர் கூட உடையார் குலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொரியர் மற்ற எல்லாப் பிரிவினரையும்விடத் தாழ்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். மற்றப் பிரிவினர்க்கு இவர்கள் அடிமை வேலை செய்து வாழ்கின்றனர். ஆருவா என்னும் பிரிவினர் மற்றையோர்க்குப் பார்ப்பனத் தொழில் புரிந்து வாழ்கின்றனர். படகர்கள் மைசூரிலிருந்து இங்குக் குடி புகுந்த பொழுது, உடன்வந்த பார்ப்பனர்களே இப்பிரிவினர் என்று. கருதப்படுகின்றனர்.

பூப்பெய்தல்

ஒரு பெண் பூப்பெய்தியதும், வீட்டிலிருந்து விலக்கி, அவளை ஒரு தனிக்குடிசையில் படகர்கள் வைத்துவிடு