பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

153

பழக்கங்களாகும். பலகறைகளால் ஒரு கழியை அலங்கரித்து, பிணம் வைக்கப்பட்ட குடிசையைச் சுற்றி ஆடும் பழக்கம் மலையாள மக்களுக்கே உரியது. தோடர்களும் அப் பழக்கத்தை மேற்கொண்டு ஒழுகுகின்றனர். இறந்துபோனவனுடைய உயிர் மேற்கு நோக்கிச் (மலையாளம் இருக்கும் திசை நோக்கி) செல்லுவதாகத் தோடர்கள் கருதுகின்றனர். தோடர்குலக் குருமார்கள், சமயச் சடங்குகளின்போது, மலையாள மந்திரங்களையே கூறுகின்றனர். தோடர்களின் உருவ அமைப்புகள் மலையாளத்திலுள்ள நம்பூதிரிகளையும், நாயர்களையுமே பெரும்பாலும் ஒத்திருக்கின்றன. தோடர்கள் நீண்ட காலத்திற்கு முன் (சுமார் 800 ஆண்டுகட்குமுன்) மலையாளத்திலிருந்து இங்கு வந்திருக்க வேண்டும். ஆகையினால் தான் தோடர் மொழி தமிழ் மொழியோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. ஏனென்றால், பண்டைய மலையாளம் தமிழேயன்றோ?

பிற செய்திகள் :

கொன்னமரா என்ற இடத்தில் தோடர்களுக்குரிய கோயில் ஒன்றுளது. உயரமான வடிவத்தை உடையது. ' பிங்கர் போஸ்ட்'டிற்குத் திரும்பும் வழியில் இதைக் காணலாம். காட்டெருமைகளைக் கண்டால், எல்லோரும் அஞ்சி நடுங்குவார்கள். ஆனால் அவைகளின் அருகில் அச்சமில்லாமல் சென்று, பால் கறக்கும். கலையைத் தோடர்கள் நன்கு அறிவார்கள்.

கோதர் :

கோதர் நீலகிரி மலைமீது 1500 பேர் வாழ்கின்றனர். கோதகிரியிலுள்ள 6 சிற்றூர்களும், கூடலூருக்கருகிலுள்ள ஒரு சிற்றூரும், இவர்களுடைய வாழ்விடங்களாம். இவர்களுடைய வீடுகள் அழகற்றவை ; உருவத்தால் பெரியவை. ஒவ்வொரு வீட்டின் முன் பகுதியிலும் தாழ்வாரம் அமைந்திருக்கும். கற்றூண்கள்