பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

வீட்டில் நாட்டப்பட்டிருக்கும். ஆனால் சித்திர வேலைப்பாடு. அவற்றில் அதிகமிருக்காது. வீடுகள் பெரும்பாலும் கூரையினால் வேயப்பட்டவை.

கோதர்கள் தூய்மையற்ற உடலினர். அவர்கள் அணியும் ஆடைகள் மிகவும் அழுக்கடைந்து காணப்படுகின்றன. தமிழரைப்போல் வேட்டியே அரையில் உடுக்கின்றனர். கோதர்களை எளிதில் அறிந்துகொள்ளலாம். படகர்களைவிடக் கறுத்த நிறமுடைவர்கள் ; நடுவில் வகிடு எடுத்துப் பின்னால் குடுமி முடிந்திருக்கின்றனர். நாகரிகம் வளர்ந்திருக்கும் இக் காலத்திலும் கூட, இறந்த விலங்குகளின் ஊனை முக்கிய உணவாகக் கொள்கின்றனர். இவர்களுடைய கடவுளாகிய காமட்டராயன் (Kamattarayan) தன் உடலிலிருந்து வழிந்த மூன்று துளி வியர்வையிலிருந்து தோடர்களையும், குறும்பர்களையும், கோதர்களையும் படைத்தானாம். அதோடு, தோடர்கள் பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றையும், குறும்பர்கள் இறைச்சியையும், கோதர்கள் அழுகிய இறைச்சியையும் உண்ண வேண்டுமென்று ஆணையிட்டானாம். அவ்வாணையின் படியே தாங்கள் அழுகிய இறைச்சியை உண்பதாகக் கூறுகின்றனர். இவ் விழிந்த உணவு, அவர்கள் உடல் நிலைக்கு ஏற்றதாக அமைந்துவிட்டது. கோதர்கள் பருத்த, உறுதியான உடற்கட்டுடையவர்கள்.

கோதர்கள் மைசூர் நாட்டுக் குன்றுகளிலிருந்து இங்குக் குடியேறியதாகக் கூறுகின்றனர். அவர்கள் பேசும் மொழி திருந்தாக் கன்னடம். தச்சராகவும், கம்மியராகவும், சக்கிலியராகவும், கொல்லராகவும் பிற இனத்தாருக்குக் கோதர்கள் பணிபுரிகின்றனர். இவ்வினப் பெண்கள் மட்பாண்டம் செய்து பிற இனத்தாருக்கு வழங்குகின்றனர். இச் சேவைக்கு ஈடாக மற்ற வர்களிடமிருந்து தானியம், எருமைகள், இறந்த மிருகங்கள் ஆகியவற்றைப் பெறுகின்றனர். அறு