பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

முள்ள பெரியோர்களடங்கிய பஞ்சாயத்தால் ஆராயப்பட்டு மணவிலக்கு அளிக்கப்படும்.

பிள்ளைப்பேறு :

பிள்ளைப் பேற்றுக்காகப் பயன்படுத்தப்படும் குடிசை, இரு அறைகளாகத் தடுக்கப்பட்டிருக்கும். ஓர் அறை மருத்துவத்திற்குரிய மனையாகவும், மற்றொன்று பிள்ளைப்பேற்றுக் காலத்தில் தங்குவதற்குரிய இடமாகவும் பயன்படுத்தப்படும். குழந்தை பிறந்ததும், தாய் அடுத்த உவா நாள் வரை அக் குடிசையிலேயே தங்கவேண்டும். உவா நாளன்று அப் பெண்ணை வீட்டுக்கழைப்பர். அன்று எல்லாருக்கும் ஒரு விருந்து நடைபெறும். ஊர்த்தலைவன் குழந்தைக்குப் பெயரிடுவான். முதற் குழந்தை ஆணாக இருந் தால், அதற்குக் 'காமட்டன்' என்று தங்கள் கடவுள் பெயரை இடுவர். பெண்களுக்கு ‘மாடி' என்ற பெயரே அதிகமாக வழங்குகிறது. மாடி என்பது அவர்கள் வழிபடும் ஒரு சிறு தெய்வத்தின் பெயர்.

சமய வாழ்வு :

கோதர்கள் வழிபடும் கடவுளரில் தலைமை பெற்றவன் காமட்டராயன். கோதர்களின் சமயகுரு 'தேவாதி' என்று அழைக்கப்படுகிறான். சமய குருவின் பதவி பரம்பரை உரிமையுடையது. கோயில் பணி புரியும் பூசாரிகளைக் கோதர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். தோடர்குலப் பூசாரிகளுக்கிருப்பது போன்று, தனியுடையோ, வேறு கட்டுப்பாடுகளோ இவர்களுக்குக் கிடையா. மற்ற மக்களைப் போலத் திருமணம் செய்து கொண்டு, குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். காமட்டராயன் மனைவியின் பெயர் 'காசிகை.' கோதர்கள் வாழும் ஒவ்வோர் ஊரிலும் இவர்களுக்குக் கோயில் உண்டு. காமட்டராயனுக்கு ஆண்டுதோறும் பெரு விழா ஒன்று நடைபெறும். தங்கள் வாழ்வில்