பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

169

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் நீலகிரி, சேலம் மாவட்டங்களிலுள்ள மலைகளின்மீது சாலை வசதிகளைப் பெருக்குவதற்காக ரூ. 37,000 செலவிடப்படும். ஆடைகள் முதலிய இதர செலவினங்களுக்காக ரூ 77,000 ஒதுக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களெல்லாம் நல்ல முறையில் அமுலாக்கப்பட்டால், பழங்குடி மக்களின் வாழ்வு சிறப்படையும் என்பதில் ஐயமில்லை.

குடியேற்றம் :

முதன் முதலாகக் கி. பி. 1602 ஆம் ஆண்டில் ஒரு போர்த்துகீசியப் பாதிரியார், நீலகிரி மலையைக் காண்பதற்காக வந்தார். அவர் பெயர் ஃபெர்ரீரி (Ferreiri). நீலகிரியில் வாழும் தோடர்களோடு உரையாடியதோடு அமையாமல், அவர்கள் குடும்பங்களுக்குப் பல பரிசில்களும் வழங்கினார். மிகவும் தொன்மையான பழங்குடி மக்களான தோடர்கள் வாழும் செய்தி, அப்பொழுதுதான் சமவெளியில் வாழும் மக்களுக்குத் தெரிந்தது.

ஃபெர்ரீரிக்குப் பிறகு நீலகிரி மலையை ஆராய்வதற்கு, 200ஆண்டுகள் வரையில் யாரும் முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை. டாக்டர் புச்சானன் (Dr. Buchanan) என்பவர், இந்திய அரசியலாரின் ஆணையை மேற்கொண்டு, மைசூர் நாட்டிலும் அதற்கு அண்மையிலும் உள்ள மலைகளை, வாணிப நோக்கோடும், பயிர்த் தொழில் நோக்கோடும் ஆராய்வதற்காக வந்தார். நீலகிரி மலையையும் சுற்றிப் பார்த்தார். ஒரு நாளில் எவ்வாறு அதை ஆராயமுடியும்? நீலகிரி மலையைப் பற்றி அவர் கொடுத்த குறிப்புகள் பயனற்றவை ; மேற்போக்கானவை. டாக்டர் புச்சானன் சென்று திரும்பியபின், 12 ஆண்டுகள் கழித்து நீலகிரி மலையை விஞ்ஞான நோக்கோடு ஆராய்வதற்காக திரு. கீஸ் (Keys) என்ற ஓர் ஆராய்ச்சியாளரையும், அவருக்குத் துணையாக மக்