பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

மகான் (Macmahon) என்ற ஒருவரையும் கோவை மாவட்டத் தண்டலர் அனுப்பிவைத்தார். ஆனால் அவர்கள் அளித்த குறிப்புகள் சொந்த ஆராய்ச்சியினால் எழுந்தவைகளல்ல. பிறர் வாயிலாகக் கேட்டறிந்தவையே. எனவே அவர்களுடைய ஆராய்ச்சியும் பயனற்றதாக ஒழிந்தது.

ஆறு ஆண்டுகள் கழிந்தபின்னர், கோவை மாவட்டத்தின் தண்டலராகப் பணியாற்றியவரும், நீலகிரிமலையின் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றவருமான திருவாளர் ஜான் சல்லிவன் என்பார், ஆராய்ச்சி விருப்பும், விடா முயற்சியும் கொண்ட இருவரை நீலகிரி மலைக்கு அனுப்பினார். அவர்கள் ஆராய்ந்து வெளியிட்ட கருத்துக்கள் தண்டலரின் கருத்தை ஈர்த்தன. அவரும் நீலகிரிக்குச் சென்றார். சென்றதோடு அமையாமல், ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்து, கோடையில் தங்குவதற்குரிய குளிர்மனை யொன்றை எழுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். நீலகிரிமலையின் மீது குடியேறிய முதல் ஐரோப்பியர் இவரே.

திருவாளர் ஜான் சல்லிவன் நீலகிரி மலைக்குச் சென்ற ஆண்டு கி. பி. 1819 ஆகும். நீலகிரி மலையை உண்மையில் ஆராய்ந்து பிறருக்கு வெளியிட்டவர் இவரே எனில், அது மிகையாகாது. இப்போது உதக மண்டலம் அமைந்திருக்குமிடத்தை திரு. சல்லிவன் முதலில் கண்டதும், அவ்விடத்தின் இயற்கையழகும். தட்ப வெப்ப நிலையும் அவர் உள்ளத்தை வெகுவாகக் கவர்ந்தன. உடனே, அவ்விடம் ஒரு குறிஞ்சி நகரம் அமைப்பதற்குரிய சிறந்த தகுதிகளையெல்லாம் பெற்றிருக்கிறது என்ற செய்தியை அரசியலாருக்கு அறிவித்தார். கி. பி. 1823-ஆம் ஆண்டு தாம் தங்கியிருப்பதற்காக ஓரழகிய மனையை எழுப்பினார். அது இப்பொழுது 'கல்மனை' (Stone House) என்ற பெயரால் அழைக் ப்படுகிறது. உதக மண்டலத்திலுள்ள சந்தை வெளி