பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

வோடைகள் இரண்டும் கீழ் ஆறு, மேல் ஆறு என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகின்றன. கீழ் ஆற்றைப் பெரியாறு என்றும் அழைப்பர். இது சேர்வராயன் மலையிலுள்ள ஏர்க்காட்டில் தோன்றுகிறது. இவ்வாறு ஏர்க்காட்டில் அமைந்துள்ள ஏரியில் தோன்றி, கிளியூர் நீர்வீழ்ச்சியில் தாவிக்குதித்து, மேற்கே திரும்பி ஓமலூரை நோக்கி ஓடுகிறது.

மற்றாேர் ஆறாகிய மேல் ஆறு சேர்வராயன் மலையின் தென்சரிவில் தோன்றிக் காடையாம்பட்டி மலைப் படுகையின் வழியாக ஓடிவருகிறது. பட்டிப்பாடி ஆறு, பறியன் குழி ஆறு, கூட்டாறு, காட்டாறு எனப் பல பெயர்கள் இதற்கு வழங்குகின்றன. இருப்புப் பாதையைக் கடந்தவுடன் இவ்வாறு தெற்கு நோக்கித் திரும்பியோடிப் பெரியாற்றில் கலக்கிறது. இவ்விதமாக இவ்விரண்டு ஆறுகளால் உண்டாக்கப்பட்ட சரபங்க நதி இடைப்பாடி, திருச்செங்கோடு ஆகிய ஊர்களுக்கு அண்மையிலுள்ள பல ஏரிகளை நிரப்பிக் கொண்டு காவேரிப்பட்டிக்கு அருகில் காவிரியுடன் கலக்கிறது.

வாணியாறு :

இது சேர்வராயன் மலையில் ஏர்க்காட்டுக்கு அருகில் தோன்றி அழகாக ஓடுகிறது. வெங்கட்ட சமுத்திரச் சமவெளியை அடைந்து, பாதையைக் கடக்கிறது. அரூரைக் கடந்ததும், பாம்பாற்றாேடு கலந்து சிறிது தூரத்தில் பெண்ணையாற்றாேடு சேர்கிறது.

காடுகள்

எங்குபார்த்தாலும் மலைத்தொடர்கள் மண்டிக் கிடப்பதால், சேலம் மாவட்டத்தில் காடுகளுக்குப் பஞ்சமில்லை. சேர்வராயன் மலைகள் மீதும் அடர்ந்த காடுகள் உள்ளன. நாட்டில் காடுகள் நிறைய இருந்தால்தான் மழைவற்றாது பெய்யும் என்று அறிவியற்கலைஞர்கள்