பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

பட்டன. கழகக் கட்டிடத்தில் ஒரு பொது அறையும், ஒரு படிக்கும் அறையும், பில்லியார்டு விளையாடும் ஒரு அறையும் ஆண்களுக்காக அமைந்துள்ளன. சீட்டாட்ட அறை (Playing cards room) ஒன்றும், ஒப்பனை அறை (dressing room) ஒன்றும் பெண்களுக்காக அமைந்துள்ளன. இக் கட்டிடத்தின் நடுவில் அமைந்துள்ள அறை மிகவும் பெரியது. அதில் ஒரு மேடையும் அமைந்துள்ளது. கோடைக்கானலில் நடைபெறும் முக்கியக் கூட்டங்களும், நாடகங்களும் இங்குதான் இடம் பெறுகின்றன.

கோடைக்கானல் பாதிரிமார் கழகம் :

நன்றாகப் பணியாற்றும் கழகங்களில் கோடைக்கானல் பாதிரிமார் கழக (Kodaikanal Missionary Union)மும் ஒன்றாகும். கி. பி. 1890-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் புதுக்கோட்டை அரசரின் தம்பியான துரைராஜா அவர்களை டாக்டர் ஃபேர்பேங்க் அவர்களும், டாக்டர் ரேசி அவர்களும் 'ஆர்கோடியா' (Arcotia) என்ற இடத்தில் ஒரு படிப்பகத்தையும் ஒரு கழகத்தையும் திறந்து வைப்பதற்காக அழைத்தனர். அதன் பிறகு அம் மூவரும் பூப்பந்து, மட்டைப் பந்து விளையாட்டுகளின் பொருட்டும், புத்தகத்தேநீர் விருந்தின் (book-teas) பொருட்டும் அடிக்கடி கூடினர். இக் கழகம் சிறிது வளர்ச்சியுற்றது. 'ராக்காட்டேஜ்' என்ற இடத்தில் இக் கழகம் சிறிது நாள் அமைந்திருந்தது. மக்கள் தொகை கோடைக்கானலில் குறைவாக இருந்தபோது பாதிரிமார், பொதுமக்கள், ஆங்கிலேயர், அமெரிக்கர் ஆகிய எல்லோரும் நெருங்கிய கூட்டுறவோடு இருந்தனர். ஆனால் மக்கள் தொகை பெருகியவுடன் அக் கூட்டுறவு சிதையத் தொடங்கியது. அதனால் அங்கு வாழ்ந்த திருவாளர்கள் விக்காஃப். டியதி, ஹேக்கெர், ஜோன்ஸ், டாக்டர் கேம்பெல் முதலியோர் மறுபடியும் இக் கழகத்தை , 'ஆர்கோடியா