பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

275

என்றும், 'திரிகூட நாதர்' என்றும் குறிப்பிடப்படுகிறான். திரிகூடாசலம் என்ற பெயரே 'திருக்குற்றாலம்' என்றும், குத்தாலம்' என்றும் மருவி வழங்குவதாகக் குறிப்பிடுகின்றனர்.

சைவ சமய குரவர்களில் முதல்வரான மணிவாசகப் பெருமான் குற்றால நகரின் சிறப்பை வான்கலந்த மாணிக்கவாசகத்தால் பாடி மகிழ்ந்தார். அவருக்குப் பின் 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானசம்பந்தர் திருக்குற்றாலப் பதிகம், திருக்குறும்பலாப் பதிகம் என்ற இரு பாமாலைகளால் குற்றால நாதரை ஒப்பனை செய்து பரவி மகிழ்ந்தார். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மேலகரம் மகாகவி திரிகூட ராசப்பன் கவிராயர் 'திருக்குற்றாலக் குறவஞ்சி', 'திருக்குற்றால மாலை', 'திருக்குற்றால ஊடல்' என்ற நூல்களைப் பக்திச் சுவையும் இன்பச் சுவையும் நனி சொட்டச் சொட்டப் பாடியுள்ளார். திருகூட நாதர் கோவில் குறுமுனியான அகஸ்தியரால் இங்கு நிறுவப்பட்டது என்று கூறப்படுகிறது.

பரமசிவனுக்கும் பருவதராசன் மகளாகிய பார்வதிக்கும் திருக்கயிலாயத்தில் திருமணம் நிகழ்ந்தது. அண்டத்தின் பல பகுதிகளிலிருந்து இறைவனின் திரு மணக்கோலத்தைக் கண்டு மகிழக் கோடிக்கணக்கானவர் கயிலையில் வந்து கூடினர். கூட்டம் மிகுதியாக இருந்ததால் வட திசை தாழ்ந்து, தென் திசை உயர்ந்தது. இதைச் சரி செய்யப் பெருவிரல் பருமனுள்ள குறுமுனியை இறைவன் தென் திசை நோக்கி அனுப்பினான். தென் திசைக்கு வந்த குறுமுனி பல புண்ணி யத்தலங்களைத் தரிசித்தார். திருக்குற்றாலத்திற்கு வந்து அங்குக் கோயில் கொண்டு எழுந்தருளியிருந்த திருமாலை வணங்கக் கோவிலுக்குச் சென்றார். சிவ வேடம் தாங்கியிருந்த குறுமுனிவர் கோவிலுக்குள் அனுமதிக் கப்படவில்லை. உடனே இலஞ்சியில் கோவில் கொண்டு எழுந்தருளியிருந்த முருகப்பிரானிடம் சென்று இதை