பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

பட்டது. இதில் தற்போது 100 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். எம்ரி பொடியிலிருந்து, சாணைக்கல், உப்புக் காகிதம், மின்சாரக் கருவிகளுக்கு வேண்டிய துணைப் பொருள்கள் ஆகியவை செய்யப்படுகின்றன.

மணப் பொருள்கள்

சேர்வராயன் மலைகளில் ஜெரேனியம் பச்சோலி, பெப்பெர் மெண்ட், யூக்கலிப்டஸ், சிற்றடோரா என்ற மணச் செடிகள் விளைகின்றன. இந்தியாவிலேயே இச்செடிகள் வளர்வதற்குரிய தட்ப வெப்பநிலை இங்கு தான் ஏற்றதாக உள்ளது என்று கூறுகின்றனர். ஏர்க்காட்டிலிருந்து நாகலூர் செல்லும் வழியில் ‘எசென்ஸியல் ஆயில்ஸ் அண்ட் கெமிகோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்’ (Essential Oils And Chemico Industries Ltd) என்ற தொழிற்சாலை உள்ளது. அதன் உரிமையாளர், திரு. பவானிசிங் என்பவர். இவர் கி. பி. 1942 இல் நடந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றவர். இவர் தமக்கு உரிமையான துர்க்கா தோட்ட (Durga Estate) த்தில் மேற்கூறிய செடிகளைப் பயிர்செய்து அவற்றிலிருந்து ஜெரேனியம் எண்ணெய், பச்சோலி எண்ணெய், பெப்பெர் மெண்ட் எண்ணெய், யூகிலிப்டஸ் எண்ணெய் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறார். இந்த எண்ணெய்கள், சோப்பு, கூந்தலெண்ணெய், செண்ட் முதலிய மணப் பொருள்கள் செய்வதற்கு மிகப் பயன் படுகின்றன.

ஜெரேனியம் செடியானது தென் ஆப்பிரிக்க நாட்டுத் தாவரம். அங்குள்ள பாறைகளடர்ந்த மலைச்சரிவுகளில் இது நிறைய விளைகிறது. அல்ஜீரியா, தென் ஃபிரான்சு, இத்தாலி, போர்பன், உருசியா, கருங்கடற் கரை, ஆகிய இடங்களிலும் இச் செடி பயிரிடப்படுகிறது. இதிலிருந்து எடுக்கப்படும்