பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

இனங்களை நல்ல முறையில் எங்கும் விளம்பரப்படுத்துவதே என் நோக்கம்” என்றார் அவர்.


ஊராட்சி :

16-5-1923 இல் இங்கு ஊராட்சி மன்றம் நிறுவப்பட்டது. கி. பி. 1911 ஆம் ஆண்டுக் கணக்குப்படி ஏர்க்காட்டின் மக்கட் தொகை 1322 ஆகும். ஆனால் இன்று ஏர்க்காட்டிலும், அதன் ஊராட்சிக்கு அடங்கிய சிற்றூர்களிலும் 19,861 பேர் வாழ்கின்றனர். இவ்வூராட்சியின் ஆண்டு வருவாய் ரூ 70,000. இவ்வூராட்சிக்கு அடங்கிய நிலப்பரப்பு, 147 சதுர மைல்.


வாரச் சந்தை :

ஏர்க்காட்டிலுள்ள பெரிய ஏரிக்கு அண்மையில் சந்தை வெளி உள்ளது. உணவுப் பண்டங்களும், வேறு பல இன்றியமையாத பொருள்களும் இச் சந்தையில் விற்கப்படுகின்றன. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இங்குச் சந்தை கூடுகிறது. அன்று ஏர்க்காடு பரபரப்பாகத் தோன்றும். தோட்டத் தொழிலாளர்களும், சேர்வராயன் மலையின் ஆதிக்குடிகளான மலையாளிகளும் அங்கு நிறையக் கூடுகின்றனர். மலைபடுபொருள்களான காய்கள், பழங்கள், கிழங்குகள், தேன் முதலியவற்றைச் சந்தையில் கொண்டுவந்து விற்று விட்டுத் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டு செல்லுகின்றனர்.


தோட்டப் பயிர்கள்

காஃபி :

சேர்வராயன் மலைகளில் விளையும் தோட்டப் பயிர்களில் தலைசிறந்தது காஃபி ஆகும். காஃபிக் கொட்டைகளில் மிகவும் உயர்ந்த ரகத்தைச் சார்ந்த அரேபிகா (Arabica) இங்கு விளைகிறது. இப்பயிர் நம்