பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

கின்றனர். 'காராளர்' என்ற பெயர் மலையாளத்தின் மற்றொரு பெயரான 'கேரளம்' என்பதனோடு தொடர்புடையது என்று சிலர் கருதுகின்றனர். மலையாளிகளின் ஒருசில பழக்க வழக்கங்கள் கேரள மக்களின் பழக்க வழக்கங்களை ஒத்திருப்பதால் அவ்வாறு கருதுகின்றனர் போலும். காராளர் என்ற சொல்லின் ஆட்சி 'உழவர்' என்ற பொருளில் பண்டைத் தமிழ் நூல்களில் மலிந்து காணப்படுகின்றது. கம்பர் கூட, "கார் நடக்கும்படி நடக்கும் காராளர் தம்முடைய ஏர் நடக்கும் எனின் புகழ்சால் இயலிசை நாடகம் நடக்கும்'- என்று கூறுகிறார். இப் பெரிய மலையாளிகள் கள்ளக்குரிச்சி வட்டத்தில் 22,000 பேரும், ஆத்தூர் வட்டத்தில் 12,000 பேரும் வாழ்கின்றனர். இம்மலையாளிகள் ஐந்து தலைவர்களால் பண்டை நாளில் இங்குக் குடியேற்றப்பட்டனர் என்று கூறப்படுகிறது. இப் பகுதிகள் ஐந்து ஜாகீர்களாகப் பிரிக்கப்பட்டு, இன்றும் அவர்கள் வழி வந்தோரால் ஆளப்படுகின்றன. இத் தலைவர்களின் உரிமை பரம்பரையானது. இந்த ஜாகீர் ஒவ்வொன்றும் பல சிறு நாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இக் கல்ராயர்கள் சேர்வராயன் மலையிலுள்ள மலையாளிகளோடு மணத்தொடர்பு கொள்வதில்லை. தொலைவும், வகுப்புப் பிரிவும் காரணங்களாக இருக்கலாம். சேர்வராயன் மலையிலுள்ள பெரிய மலையாளிகள் மூன்று பிரிவினர்களாக வாழ்கின்றனர். சேல நாடு, மொக நாடு, முத்து நாடு என்பவையே அப் பிரிவுகள். ஒவ்வொரு பிரிவும் ஒரு பட்டக்காரனின் ஆணைக்கு உட்பட்டது. ஒவ்வொரு பிரிவும் ஒன்பது பட்டிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பட்டியும் மூப்பன் என்ற தலைவனின் ஆணைக்கு அடங்கியது. ஒவ்வொரு மூப்பனும் அப்பட்டியிலுள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறான், ஒவ்வொரு பட்டக்காரனுக்கும் துணையாக மணியக்காரர்களும், மூப்பர்களுக்குத் துணையாகக் கங்காணிகளும் உள்ளனர். சித்தேரியிலுள்ள 'குரு' சேர்வராயன்