பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

மலையிலுள்ள மூன்று நாட்டுப் பெரிய மலையாளிகளாலும் போற்றி மதிக்கப்படுகிறார்.

பார்ப்பனப் புரோகிதர்கள் மலையாளிகளுக்குக் கிடையாது. மேற்கூறிய சாதித் தலைவர்களே மற்ற பொறுப்புக்களோடு, திருமணம் முதலிய சடங்குகளையும் முன்னின்று நடத்துகின்றனர். ஆனால் பவானி வட்டத்திலுள்ள கொல்லி மலையாளிகள் மட்டும் ஓர் அய்யங்காரைக் குருவாக ஏற்றுக் கொண்டுள்ளனர். பட்டக்காரர்களும், துரைகளும் மலையாளிகளால் பெரிதும் மதிக்கப்படுகின்றனர். இவர்களைக் காண்போர் எதிரே குப்புற விழுந்து வணங்குவர்.

மலையாளிகளும் கேரளத்தாரும் :

இம் மலையாளிகளைப் பற்றிய கதை காஞ்சீபுரத்தோடு தொடர்பு கொண்டிருந்தாலும், இவர்களுடைய பழக்க வழக்கங்கள் மலையாள நாட்டு மக்களோடு தொடர்புடையனவாக இருக்கின்றன. ஆகையினால் இவர்கள் மலையாளத்திலிருந்து இம் மலைகளில் வந்து குடியேறியவர்களாகக் கருதப்படுகின்றனர். ஆனால் இவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள 'கல்ராயன் கல்வெட்டு'களில் இக் குடியேற்றத்தைப் பற்றி எச் செய்தியும் காணப்படவில்லை. இவர்களுடைய பழக்க வழக்கங்களில் ஒருசில, கேரளத்தாரின் பழக்க வழக்கங்களோடு ஒத்திருப்பதால் இவர்கள் கேரளத்தாரே என்று நாம் கூறிவிட முடியாது. அப்பழக்கங்கள் பின் வருமாறு:

(1) கொல்லி மலையிலுள்ள சிறுவர்களும் சிறுமிகளும் முன் குடுமி வைத்திருப்பர். தலையின் மற்ற பாகங்களை மொட்டையடித்து விடுவர். மலையாளக் கடற்கரையில் வாழும் இந்துக்கள் இப் பழக்கத்தைப் பெரும் அளவு கடைப்பிடித்து வருகின்றனர். கொல்லி மலைச் சிறுவர்கள் பன்னிரண்டாம் வயது முடிந்த பின், முன் குடுமியை எடுத்துவிட்டுத் தமிழகத்தின் கீழ்க்