பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

இது ஆரியப் பண்பாடு என்று கருதுகிறேன். ஆனால் இப் பழக்கம் பரவலாகக் கேரளக் கடற்கரையில் காணப் படுகிறது“ என்று கூறுகிறார்.

(4) பெரிய மலையாளிகளும் பச்சை மலையாளிகளும் பச்சை குத்திக் கொள்ளும் பழக்கத்தை அனுமதிக் கின்றனர். ஆனால் கொல்லி மலையாளிகள் இதை அறவே வெறுக்கின்றனர். பச்சை குத்திக் கொண்ட யாரையும் தங்கள் வீட்டிற்குள் இவர்கள் நுழைய விடுவதில்லை. இதனுடைய உண்மையான காரணம் என்னவென்று புரியவில்லை. கொல்லி மலையாளிகளைப் போலவே கேரளக் கடற்கரையில் வாழ்வோரும் பச்சை குத்திக்கொள்ளும் பழக்கத்தை மேற்கொள்வதில்லை. பச்சை மலையாளிகளின் பச்சை குத்திக் கொள்ளும் பழக்கம், நடுவணணன் திருமணம் செய்து கொண்ட வேடச்சியினிடமிருந்து வழி வழியாக வந்ததாகக் கூறுகின்றனர்.

(5) பூப்பெய்திய மலையாளப் பெண், ஒரு திங்கள் அளவும் தனியிடத்தில் ஒதுக்கி வைக்கப்படுகிருள். கேரள நாட்டிலும் இவ்வாறே. சமவெளியில் வாழும் மக்கள் இவ்வாறு நீண்ட நாள் ஒதுக்கி வைப்பதில்லை. இப்பொழுது இந் நாட்களின் அளவு மலையாளிகளிடையே குறைந்து வருகிறது.

(6) கொல்லிமலைப் பெண்கள் தங்கத்தால் செய்த வட்ட வடிவமான ஒரு நகையைக் காதில் அணிகின்ற னர். வேறு உலோகத்தால் செய்து, தங்க முலாம் பூசியும் அணிந்து கொள்கின்றனர். இதன் விட்டம் 1 அங்குலமோ அல்லது 1; அங்குலமோ இருக்கும். இதை அணிந்து கொள்வதற்காகக் காதில் பெரிய துளை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந் நகை கேரளத்தில் வாழும் நாயர் மகளிர் அணியும் தோடாக்களை உருவத்தில் ஒத்திருக்கிறது.