பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இடமும் இயல்பும் ;43. தும் சின்னுரல் ஒன்றில், திரு. ரா. இராகவையங்காரவர்கள், கோசர், முதற்கண் கான்மொழி நாடு எனும் பகுதி யில் வதிந்து, பின் குடகில் குடியேறியவராவர்" என்று கூறியுள்ளார்." கான்மொழிக் கோசர் தோன்றி யாங்கு” என்ற மதுரைக்காஞ்சித் தொடரும், திருவறைக் கல்லும் கான்மொழி காடும் உடைய வத்தவராயனை விடு காதன்” என்ற கல்வெட்டுத் தொடருமே அவரை அவ்வாறு கொள்ளச் செய்தன. "மதுரைக் காஞ்சித் தொடருக்கு, நாற்கோசர் மொழித் தோன்றியாங்கு எனச் சிதைத்துக் கட்டி நான்கு வகையாகிய கோசர் வஞ்சின மொழியால்ே விளங்கினுற் போன்று” எனக் கூறும் கச்சினர்க்கினியர் உரையினும், நான்மொழி காட்டுக் கோசர் தோன்றினும் போன்று எனக் கிடந்தபடியே பொருள் கொள் வதே பொருந்தும் ஆதலாலும், கல்வெட்டுத் தொடர் வழங்கும் திருவறைக் கல்லாகிய நாமக்கல் மலே, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்ற இந் நான்கு மொழி யும் வழங்குதற்குரிய எல்லேயில் இருப்பதால், அது இருக்கும் நாடு நான்மொழிகாடு எனும் பெயருடையதாதல் பொருங் தும் ஆதலாலும், அங் கான்மொழி நாடு, கோசர் வாழ்ந்த கொங்கு நாட்டின் வடபகுதிக்கண் விளங்குவதாலும், கோசர் முதற்கண் கான்மொழி காட்டில் வதிந்து, பின், குடகில் குடி யேறியவரார் எனக் கொள்வதே பொருந்தும்' என்றும் கூறு கிருர் அவர் மதுரைக் காஞ்சியின் பாட்டுடைத் தலைவருகிய தலை யாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழி யனும், அதைப் பாடிய புலவராகிய மாங்குடி மருதருைம் கடைச்சங்க காலத்தவராவர். கடைச்சங்கம் கி.பி. இரண் டாம் நூற்ருண்டைச் சேர்ந்ததாகும். அக்காலத்தில், இன் றைய கேரள நாட்டில் சேர அரசே சிறப்புறத் திகழ்ந்தது. அக் கால நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் வழங்கும்