பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.8 தமிழகத்தில் கோசர் எழுந்திருக்கும் இதே நாழிகையில், ஆண்டும் எழுந்திருக்கும் என எண்ணுவதற்கில்லை; மேலும், அவர் சென்றிருக்கும் நாடோ சேணெடும் தொலைவில் உளது; ஆகவே, அவர் இம் மேகத்தின் மின்ைெளியைக் காண்பதோ, இடியொலியைக் கேட்பதோ இயலாது; கார்காலத் தொடக்கக் காட்சியை அவர் கண்டிரார்; ஆகவேதான் அவர் வந்திலர் போலும் ” எனத் தனக்குள்ளே கூறித் தன் நெஞ்சைக் தேற்றிக்கொள் வாள் போல், பொய்ச்சூள் புகல்வாரைத் துன்புறுத்தும் தெய்வத்தை நோக்கிக் கூறிக் குறை இரங்து நின்ருள். அம் மங்கை நல்லாளின் மனக் குறையை மாண்புமிகு பாவடிவில் வார்த்து வழங்கியுள்ளார் புலவர் கருவூர்க் கோசனர்." 1. "இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் அசையுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வு இன்ம் என வினவயின் பிரிந்த வேறுபடு கொள்கை அரும்பு அவிழ் அலரிச் சுரும்பு உண் பல்போது, அணியவருதும் நின் மணிஇருங் கதுப்பு என எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உனக் கூறி மைசூழ் வெற்பின் மலேபல இறந்து செய்பொருட்கு அகன்ற செயிர்தீர் காதலர் கேளார். கெர்ல்லோ? தோழி! தோளின் இலங்குவளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி நகுவது போல மின்னி -- ஆர்ப்பது போலும் இக் கார்ப் பெயல் குரலே' X-நற்றிணை 214.