பக்கம்:தமிழக ஆட்சி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படை

101


-

மறவர்கள் புடை சூழச் சென்றது.’’ என்று ஒரு செய்யுள் பேசுகின்றது. -

யானைப்படை வீரர் வேல்களைத் தாங்கிப் போரிட்டனர். சிறுரர் மன்னன் படைகளை எதிர்த்துப் போரிட்ட யானைகள் அம்புகளால் தாக்குண்டு தம் பெண் யானைகள் நானும்படி ஓடின. நெடுங்கிள்ளிக்கும் நலங்கிள்ளிக்கும் நடைபெற்ற போரில் யானைகள் பங்கு கொண்டன என்று கோவூர்கிழார் குறித்துள்ளார்.” தலயாலங்கானத்துச் .ெ ச ரு வென் ற பாண்டியன் நெடுஞ்செழியனிடமும் யானைப்படை இருந்தது என்று முல்லேப்பாட்டு மொழிகின்றது. பகைவரது கோட்டைக் கதவுகளே உடைக்கும் முயற்சியில் தனது கொம்பு ஒடிந்ததால் சோழனது ஆண் யானே தன் பிடியைப் பார்த்து வெட்கப்பட்டது என்று முத்தொள்ளாயிரம் கூறு கின்றது. சங்க காலத்தில் யானையை வெல்லுவதே வீரனது கடமை என்று கருதப்பட்டன என்பது,

களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே ‘

என்ற புறப்பாட்டு அடியால் தெளிவுறும்.

முயலேக் குறி தவருமல் எய்த அம்பைக் கையில் பிடிப்பதைவிட, யானை மேல் எறிந்து தவறிய லேலைக் கையிற் பிடித்தல் சிறந்தது என்று வள்ளுவர் கூறியுள்ளார்.” இதல்ை யானையை எய்வதே விரனுக்கு அழகு என்பது பெறப் பட்டது; கோழிப் போர், கெளதாரிப் போர். ஆட்டுக்

1. புறநானூறு. செ. 13

புறநானூறு, செ. 308.

3. புறநானூறு, செ. 44. 4. டிெ, செ. 312.

5. அதிகாரம், 78, செ. 2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/108&oldid=573626" இலிருந்து மீள்விக்கப்பட்டது