120
தமிழக ஆட்சி
திருவள்ளுவர் பத்துப் பாக்களில் கூறியுள்ளார்: “நற்குடிப் பிறப்பும் அரச பக்தியும் ஆவன அறியும் அறிவுடமையையும் ஆராய்ந்த சொல்வன்மையும், நீதி நூல் அறிவும் தூதர் பெற். றிருத்தல் வேண்டும். கண்டவர் விரும்பும் தோற்றப் பொலிவும், பலரோடும் பலகாலும் ஆராயப்பட்ட கல்வியும், இயற்கை அறிவும் தூதருக்கு இன்றியமையாதவை. வேற்ற ரசரிடம் சென்று காரண வகையால் செய்திகளே விளக்கி, இன்னத காரியங்களைச் சொல்லும்பொழுது வெய்ய சொற் களே நீக்கி, இனிய சொற்களால் மனமகிழச் சொல்லித் தன் அரசனுக்கு நலம் உண்டாகச் செய்பவனே தூதன். தான் வந்த காரியத்தை மாற்றரசன் மனங்கொள்ளச் சொல்லி, அவன் சினந்து நோக்கினல் அதற்கு அஞ்சாது, தான் வந்த காரியத்தை நயம்பட முடிப்பவனே தூதன். தூதன் பொருள், காமம் முதலியவற்றால் தூயவளுதல் வேண்டும்; எத்தகைய விருப்பத்திற்கும் இடந்தராமல் தன் காரியத்தில் கண்ணு யிருப்பவனே உண்மைத்துரதன். தன் அரசன் சொல்லிவிட்ட செய்தி வேற்றரசனுக்கு வேம்பாய் இருப்பினும், நயம்படக் கூறுதல் வேண்டும். அதனல் தன் உயிர் போவதாயினும் அஞ்சலாகாது.’ இத்தகைய தூதர் சங்ககாலத்திலும் பிற் காலங்களிலும் தமிழகத்தில் இருந்து வந்தனர்.
சங்ககாலத்தில் ஒளவையார் என்ற பெண்பாற்புலவர் அதியமானிடமிருந்து காஞ்சி அரசனை தொண்டைமானிடம் அரசியல் தூதராகச் சென்றார், தமது பேச்சுத் திறமையால் அதியமானது போர்த்திறனை விளக்கிளுர், நடக்க இருந்த போரைத் தடுத்தார் என்பன புறநானூற்றுப்பாடல் ஒன்றால் தெரிகின்றன. -
சேரன் செங்குட்டுவன் இமயமலையிருந்து பத்தினியின் உருவம் பொறிக்கத்தக்க சிலையைக்கொண்டு வரத் தன் படை யுடன் புறப்பட்டு, வழியில் நீலகிரியில் தங்கின்ை. அவன்
1. குறள், அதிகாரம் 69. 2. செ. 95. -