படை
121
நண்பரான் நூற்றுவர் கன்னரால் அனுப்பப்பெற்ற சஞ்சய அனத் தலைவகைக் கொண்ட தூதுக்குழு அப்பொழுது அவனைக் கண்டது. சஞ்சயன் சேரனப் பணிந்து, கண்ணகியின் உரு வத்தைப் பொறிக்கத்தகும் கல்லேக்கொண்டு வரவே நீங்கள் யாத்திரை செய்வதாயிருப்பின், அந்த வேலையை நாங்களே செய்வோம். இச்செய்தியை எம் அரசர் சொல்லியனுப் பினர்,” என்று கூறினன். செங்குட்டுவன், ‘வடநாட்டு மன்னனை கனகனும் விசயனும் தமிழரசர் வீரத்தை இழித் துக் கூறினராம். அதனையும் மனத்தில் வைத்தே இச்சேனை வடக்கு நோக்கிச் செல்கின்றது. நீ உன் அரசரிடம் சொல்லி நாங்கள் கங்கையாற்றைக் கடக்கும் முறையில் படகுகளை உதவச் செய்க,’ என்று கூறி அனுப்பினன்.”
இதிலிருந்து சேரன் செங்குட்டுவனது அரசியல் செல் வாக்கும் அயல்நாட்டு உறவு இருந்த தன்மையையும் நாம் நன்கு உணரலாம் அன்றோ?
சங்ககாலத்தில் பாண்டியன் உரோமப் பேரரசனன அகஸ்டஸ் என்பவரிடம் தூதுக்குழுவை அனுப்பின்ை.” பல்லவர் காலத்தில் இராசசிம்ம பல்லவன் ஒரு தூதுவன .சீனத்திற்கு அனுப்பின்ை. சீனப்பேரரசன் அவனை அன்போடு வரவேற்றான்; அவனே மிகுந்த கவனத்துடன் உபசரிக்கும்படித் தன் அதிகாரிகளுக்கு ஆணையிட்டான். அத்தாதன் பல்லவ நாட்டுக்குத் திரும்பியபோது பூ வேலைப்பாடு பொருந்திய பட்டு அங்கியையும் வேறுசில விலையுயர்ந்த பொருள்களையும் வழங்கினன்.” -
1. சிலம், காதை26, வரி 137-165
2. K. A. N. சாஸ்திரி, சோழர், பக். 34.
3. டாக்டர் மீட்ைசி, பல்லவர் ஆட்சியும் சமுதாய
வாழ்க்கையும், பக். 90.