பக்கம்:தமிழக ஆட்சி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள் ஆட்சி

137



குற்றங்கள் முதல் கொலைக் குற்றங்கள் வரை உள்ள எல்லா வகை வழக்குகளையும் சபையார் விசாரித்தனர்; குற்றங்களுக்கு ஏற்றவாறு பொன் தண்டம் விதித்தல், சிறையிடல், கொலைத் தண்டனை விதித்தல் என்ற முறையில் நீதி வழங்கினர்; எளிய குற்றங்களுக்கும் அறியாமையால் நேர்ந்த தவறுகளுக்கும் கோவில்களில் விளக்கெரிக்கும்படித் தீர்ப்பளித்தனர்.

சில சபைகளில் ஐந்துக்கு மேற்பட்ட வாரியங்களும் இருந் தன. வட ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த காவேரிப் பாக்கம் (காவிதிப்பாக்கம், சபையில் எட்டு வாரியங்கள் இருந் தன. அவை சம்வத்சர வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம், கழனிவாரியம், பஞ்சவார வாரியம், கணக்கு வாரியம், கலிங்கு வாரியம், தடிவழி வாரியம், (நிலங்களை மேற்பார்க்கும் குழு) என்பன .’

ஊர்ச்சபை ஒரு முக்கியமான செய்தி பற்றி முடிவுக்கு வரக்கூடவில்லையாயின், அவ்வூரில் உள்ள மற்றாெரு சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளும். மூன்றாம் இராசராசசோழன் காலத்தில் ஒர் ஊரிலிருந்த மூலப்படை (கோவில் ஆட்சிக் குழு), ஊர்ச்சபைக்கு உரிய தேர்தல் விதிகளையும் ஊராட்சி முறைகளையும் முடிவு செய்தது என்று கல்வெட்டு கூறுகிறது.” இங்ஙனம் நடைபெறுதல் சிறுபான்மை நிகழ்ச்சியாகும்.

உளர் ஆட்சிமுறை

சபைக்கு (பிராமணர் ஆட்சி மன்றத்திற்கு) உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டவாறே ஊர் மன்றத்திற்கும் உறுப்பினர். தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று கொள்வதே பொருத்த

1. S. I. I III. 156 : 2. 89 of 1931-32; A. R. E. 1932, para 19 ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/144&oldid=573662" இலிருந்து மீள்விக்கப்பட்டது