பக்கம்:தமிழக ஆட்சி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள் ஆட்சி

147



கருப்பூர், குளத்தூர் என்ற ஏழுர் வகையார்க்கும் ஐந்நூற்றீசர் குலதெய்வம் என்பது கூறப்படுகிறது. மாத்துார்க் கோவில் சிவனுக்கு ஐந்நூற்றீசர் என்பது பெயராகும். -

இளையாற்றங்குடிக் கோவிலைச் சேர்ந்தவருள் அரும்பாற் கிளையரான பட்டணசாமியார் என்பவர் ஒரு வகையினர். இராசா சர். முத்தையா செட்டியார் பட்டணசாமியார் மரபினராவார். இளையாற்றங்குடிக் கோவிலுள் பட்டண சாமி கோவில் ஒன்று இருக்கின்றது. ஐந்நூற்றுவர் சங்கத் தலைவன் பழங்காலத்தில் பட்டணசாமி என்று அழைக்கப் பட்டான் என்பது முன்பே கூறப்பட்டதன்றோ?

இவை அனைத்தையும் நோக்கச் சோழர்கால நகரத்தாருள் இவர் முன்னேரும் ஒரு பகுதியினராக இருந்திருக்கலாம் என்று கருதுதல் பொருத்தமாகும்.

கோவில்

அரசர்கள், சிற்றறசர்கள், முன் சொன்ன வணிகப் பெரு மக்கள், பிற குடிமக்கள் ஆகிய அனைவருமே கோவிலைத் தம் உயிராகக் கருதி, அதில் திருநந்தா விளக்கு எரிக்கவும், பூசை செய்யவும், விழாச்செய்யவும் ஏராளமான நிலங்களையும் தோட்டங்களையும் பொன்னையும் நகைகளையும் பொன்வெள்ளிப் பாத்திரங்களையும் பூசை முதலியவற்றுக்குரிய செப்பு முதலிய உலோகப் பாத்திரங்களையும் கால்நடை களையும் பிறவற்றையும் மிகுதியாக வழங்கினர். இவற்றாேடு ஊரிலிருந்து அரசாங்கத்துக்குச் சேரவேண்டிய வரிகளில் சில கோவிலுக்குத் தரப்பட்டன. பொதுமக்களிடமும் கோவி லுக்கென்று வழக்கமாகப் பணம் வசூலிக்கப்பட்டது. நீதி மன்றங்களில் விதிக்கப்பட்ட தண்டத்தில் ஒருபகுதி பண மாகக் கோவிலுக்குச் செலுத்தப்பட்டது; சில இடங்களில் ஆடுகளாகவும் வேறு பொருள்களாகவும் செலுத்தப்பட்டது. நாதியற்றவர் சொத்துக்கள் கோவிலைச் சேர்ந்தன. இவ்வாறு பல வழிகளில் கோவிலுக்கு நிலமும் பணமும் பிறவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/154&oldid=573672" இலிருந்து மீள்விக்கப்பட்டது