அரசுரிமை
31
எனவே, அவன் சிறுவகை இருந்தபொழுதே அரசனைன் என்று கருதுதல் தகும். பல்லவமல்லன் பன்னிரண்டு வயதில் முடி சூட்டப் பெற்றான். இரண்டாம் இராசாதிராசன்’ இரண்டு வயதில் அரச பதவி ஏற்றான். அவன் வயது வரும் வரையில் அவனது அமைச்சரான பல்லவராயர் ஆட்சியைக் கவனித்து வந்தார்,
முடிசூட்டு விழாவைப்பற்றிய விவரங்கள் தமிழ் நூல் களில் கிடைத்தல் அருமை. வைகுந்தப்பெருமாள் கோவில் சிற்பங்களைக் கொண்டு பல்லவர் கால முடிசூட்டு விழா பற்றிய விவரங்களே ஒருவாறு அறியலாம். முடிசூட்டப் பெறுபவன் குதிரைமீது அமர்த்தப்பட்டு அரண்மனைக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுவான்; அரண்மனையில் அமைச்சர் முதலிய உயர் அலுவலர், நகரப் பெருமக்கள். சிற்றரசர், ஆட்சி மன்றக் குழுவினர் இவர்களால் வரவேற்கப் படுவான். பின்பு அமைச்சர், சேனைத் தலைவர், கடிகையார் முதலிய பெருமக்கள் அவனுக்கு முழுக்குச் (அபிஷேகம்) செய்வர் முழுக்குக்குப் பின்பு அவனுக்கு அரச சின்னங்களே வழங்குவர்.”
கிருஷ்ணதேவராயர் முடிசூட்டுவிழா பற்றிய விபரங் களை இங்கு அறிதல் சுவை பயக்கும்; அவர் பொன் ஆசனத்தில் அமர்ந்து பத்துவகைத் தானங்களையும், பதினறு வகைத் தானங்களையும் செய்தார்; தம் நிறை அளவு பொன்னையும் வெள்ளியையும் முத்துக்களையும் தானம் செய்தார். முழுக்குக்கு என்று கங்கை, யமுனே, சரசுவதி, சிந்து, நர்மதை, கோதாவரி, காவிரி, பொருநை
1. R. கோபாலன், பல்லவர் வரலாறு, பக். 114-118. இரண்டாம் அம்ம என்பவனும் தன் 12ஆம் வயதில் வேங்கி அரசனைன். 433 of 1924.
2. டாக்டர் மீட்ைசி, வைகுந்தப்பெருமாள் கோவில்
சிற்பங்கள், பக்கம். 36-37.