பக்கம்:தமிழக ஆட்சி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழபுரம் புதிய தலைநகராய் அமைந்தது. அக்காலத்தில்

அரசுரிமை 45.

தஞ்சாவூர், பழையாறை, கங்கைகொண்ட சோழபுரம்,காஞ்சீ

புரம் என்பவை அரண்மனைகளைப் பெற்றிருந்தன. இரண்டாம் இராசராச சோழன் காவிரிப்பூம்பட்டினத்துத் தெருக்களில் உலா வந்தனன் என்று அவன் ஆசிரியரான ஒட்டக்கூத்தர் கூறியுள்ளமையால், காவிரிப்பூம்பட்டினமும் பிற்காலச் சோழரது அரண்மனையைப் பெற்றிருந்தது என்று கொள்ள லாம். தஞ்சாவூர் பின் வந்த நாயக்கர்க்கும், மகாராட்டிர ருக்கும் தலைநகராய் விளங்கிற்று. அதுபோலவே மதுரையும் பாண்டியர்க்குப் பின் வந்த நாயக்கர்க்குத் தலைநகராய் விளங் கியது. மதுரை நாயக்கர்க்குச் சிறிது காலம் திருச்சிராப்பள்ளி யும் தலைநகராய் இருந்தது.

காவிரிப்பூம்பட்டினம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்ற இரு பிரிவுகளைக் கொண்டது. கடற்கரையில் அமைந்த

நகரப்பகுதி மருவூர்ப்பாக்கம் எனப்பட்டது. அங்குத் துறை முகத்தொடர்பான கட்டிடங்களும் அயல் நாட்டு வணிகர்

இல்லங்களும் இருந்தன. படடினப்பாக்கத்தில் சோழன்

அரண்மனேயும் குடிமக்கள் வாழும் தெருக்களும் இருந்தன.

மதுரையைச் சுற்றிலும் உயர்ந்த கோட்டை மதில் இருந்தது.

அதனை அடுத்துப் பெரிய காவற்காடு இருந்தது.

அதற்கு அப்பால் ஆழமான அகழி இருந்தது. நாயக்கர்

காலத்தில் அகன்ற மதிற் சுவர்கள் இரண்டு இருந்தன. சேரர்

கரூர் (வஞ்சி) பேரியாற்றங்கரையிலும், உறையூர் காவிரிக் கரையிலும், மதுரை வையைக் கரையிலும் அமைந்திருந்தன.

அரண்மனைகள்

சங்க காலத்தில் அரண்மனை கோயில் எனப்பட்டது:

‘வாயில் வந்து கோயில் காட்ட என்பது சிலப்பதிகாரம்; பிற் காலச் சோழர் காலத்தில் மாளிகை எனவும் திருமாளிகை.

எனவும் பெயர் பெற்றது.

1. இராசராச சோழன் உலா, கண்ணி 55.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/52&oldid=573570" இலிருந்து மீள்விக்கப்பட்டது