உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

தமிழக ஆட்சி



இதனை நோக்க, இவர்களும் ஆட்சியில் பங்கு கொண்டவர்கள் என்பதை அறியலாம். அமைச்சர்

திருவள்ளுவர் அமைச்சர் இலக்கணத்தையும் கடமை களையும் பத்துப்பாக்களில் கூறியுள்ளார். எனவே, அவர் வாழ்ந்த சங்ககாலத்தில் அமைச்சர் இருந்தனர் என்பது தெளிவு.

‘அஞ்சாமை, நற்குடிப் பிறப்பு, நாடுகாக்குந் திறமை, கற்ற்றிந்த அறிவு, முயற்சி இவற்றைச் சிறப்புற உடைய வனே அமைச்சன். பகைவருக்குத் துணையானவரைப் பிரித்தல், தம்மிடம் உள்ளவரைக் காத்தல், தம்மைப் பிரிந்தவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளல் இவற்றில் அமைச்சன் வல்லவனாக இருத்தல் வேண்டும்; செயலுக்கு உரிய கருவியும், ஏற்ற காலமும், செய்யும் வகையும், செய்யப்படும் அரிய செயலும் சிறப்புறச் செய்ய வல்லவனே அமைச்சன். அவன் அறத்தை அறிந்திருத்தல் வேண்டும்: அறிவு நிறைந்து பொருந்தப் பேசுபவனாய் இருத்தல் வேண்டும்; எக்காலத்திலும் செயல் செய்யும் திறமை உடையவளுய் இருத்தல் வேண்டும்; இயற்கை அறிவும் நூலறிவும் பெற்றிருத்தல் வேண்டும்; நூலறிவால் செயலைச் செய்யும் வழிகளை அறிந்த போதிலும், உலக இயற்கையை அறிந்து அதனோடு பொருந்தச் செயலாற்ற வேண்டும்; அரசனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூற அஞ்சாதவளுப் இருத்தல் வேண்டும். இவை அமைச்சரைப்பற்றிய வள்ளுவர் கருத்துக்கள்.

மதுரைக் காஞ்சியில் அமைச்சர் காவிதி மாக்கள் என்று குறிக்கப்பட்டுள்ளனர்:

“கன்றும் தீதும் கண்டாய்ங் தடக்கி

அன்பும் அறனும் ஒழியாது காத்துப் பழிஒரீஇ உயர்ந்து பாயுகள் நிறைந்த செம்மை சான்ற காவிதி மாக்கள்.’

1. வரி 496-499

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/57&oldid=573575" இலிருந்து மீள்விக்கப்பட்டது