பக்கம்:தமிழக ஆட்சி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சிக் குழுக்களும் அலுவலரும்

53



தான். ஆட்சியிலும் முதலிடத்தைப் பெற்றிருந்தவன் அவனே. அவன் ஆட்சியின் பல துறைகளைக் கவனித்து வந்தான்.”

உடன் கூட்டத்து அதிகாரிகள்

‘உடன் கூட்டத்து அதிகாரிகள்’ என்ற தொடர் சோழர் கல்வெட்டுக்களில் அடிக்கடி வருகின்றது. உடன் கூட்டம்’ என்ற தொடரை நோக்கும்பொழுது, அரசனுடன் இருந்து ஆட்சித் துறையில் செயலாற்றும் கூட்டம், அல்லது யோசனை கூறிச் செயலாற்றும் கூட்டம் என்று பொருள் கொள்ளலாம். அதிராசேந்திரன் காலத்துத் திருப்பாசூர்க் கல்வெட்டு ஒன்று உடன் கூட்டத்து அதிகாரிகளையும் வேறு சிலர் உயர் அலுவலர் பெயர்களையும் குறிக்கின்றது. திருமுக் கூடல் கல்வெட்டு ஒன்று அரசனது ஆணையைக் கூறி, அந்த ஆணேயில் உடன் கூட்டத்து அதிகாரிகள் அறுவர் கையெழுத் திட்டதாகவும் கூறுகின்றது. உடன்கூட்டத்து இசைவும், “நாடு’ என்னும் பேரவையின் இசைவும் பெற்றே பல்லவராயர் இரண்டாம் இராசாதிராசனுக்கு முடி சூட்டினர் என்று பட்டயம் குறிக்கின்றது.”

உடன் கூட்டத்தைச் சேர்ந்த நிலவரி வசூலிக்கும் இலாக்காவைப் பற்றிய குறிப்பு முதற் குலோத்துங்கன் காலத்தில் குறிக்கப்பெற்றுள்ளது. இவை அனைத்தை யும் நோக்க, சோழப் பேரவையில் நடைபெற்ற அன்றாட நிகழ்ச்சிகளில் உடன்கூட்டம் தொடர்பு கொண்டிருந்தது என்பது தெளிவாகின்றது. அரசாங்கத்தின் பல துறை களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளரின் (பிரதி

1. சத்தியநாதையர், மதுரை நாயக்கர், P. 86. 2. 113 of 1930; Epigraphia Indica 21, p. 221, 234, 244 3 р, 190, 192.

4.42 வே.

3 y

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/60&oldid=573578" இலிருந்து மீள்விக்கப்பட்டது