ஆட்சிக் குழுக்களும் அலுவலரும்
59
(4) நிலம் பற்றிய அரசன் ஆணைகளைச் செப்புப் பட்டயங் களிலும் கல்லிலும் வெட்டுவோர் இருந்துவந்த துறை முகவெட்டி எனப்பட்டது. Aih
(5) நிலத்தை அளந்து பார்க்கும் துறை தெரிப்பு. (Survey) startull-gs.
(6) கொடுத்த பணத்திற்கு இரசீது கொடுக்கும் துறை. தரவு சாத்து எனப்பட்டது.
(1) பழைய பாக்கிகளைக் கவனிக்கும் துறை பழகியாயம் எனப்பட்டது.
(8) வரிப்புத்தகத்தில் வரிகளைப் பதிவு செய்யும் துறை வளியிலீடு எனப்பட்டது.
(9) வரிப்புத்தகத்திலுள்ள கணக்குகளைக் கவனிக்கும். துறை வரிப்புத்தகக் கணக்கு எனப்பட்டது.
(10) அரசன் ஆணைகளைப் பாதுகாக்கும் துறை பட்டோலே எனப்பட்டது.’
ஆவணக் களரி
ஆவணம்-பத்திரம். களரி - அலுவலகம். அந்நாளில் ஊர்கள்தோறும் எழுதப்படும் ஆவணங்களை (பத்திரங்களைக்). காப்பிட (பதிவு செய்ய) ஆவணக் களரியும் (Registration office) இருந்தது. நிலத்தை விற்போரும் வாங்குவோரும் ஆவணத்துடன் அங்குச் சென்று நிலத்தின் விலையையும் நான் கெல்லையையும் தெரிவித்துத் தம் உடன்பாட்டிற்கும் உறுதி மொழி கூறி ஆவணம் காப்பிடப் பெற்ற பின்னர்த் திரும் புவர். இவ்வாவணம் என்றும் பயன்படக் கூடியிருப்பதா
1. A. R. E. 1931–32. 14. -