பக்கம்:தமிழக ஆட்சி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரவு செலவு

65



(6) படைக்குரிய வருமானம்

மிகப் பிற்பட்ட நூற்றாண்டுகளில் படையைப் பாது காப்பதற்குப் பொதுமக்களிடமிருந்து அரசாங்கம் வரி வசூலித்தது. அவ்வரி பட்டயக காணிக்கை, தண்டநாயகர் மகமை” என்று பெயர் பெற்றன. கோட்டைகளைப் பாது காக்க வசூலிக்கப்பட்ட பணம் கோட்டைப் பணம்’, கோட்டைப் பதிவு என்று பெயர் பெற்றன.”

முதற் பராந்தகன் குடமூக்குச் சபையார்க்கு மூவாயிரம் கழஞ்சு பொன் தண்டம் விதித்து, அதனைப் பாண்டிப் படைக்குச் செலுத்தும்படிக் கட்டளையிட்டான் என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. ஒரு வேலி நிலத்திற்கு ஒரு கழஞ்சு பொன் வீதம் ஆலங்குடி மக்கள் தன் வேங்கி நாட்டுப் போருக்குச் செலுத்தவேண்டும் என்று வீரராசேந் திரன் கட்டளை பிறப்பித்தான்.” இங்ஙனம் போர்க்காலங் களில் தனிவரி வசூலிக்கப்பட்டதென்பது இவற்றால் தெரிகிற தன்றோ ?

இரவு என்பது ஒரு வரிக்குப் பெயர். அரசன் சில சமயங்களில் போர் அல்லது பஞ்சம் நேர்ந்தபொழுதுகுடிமக்களிடம் பொருள் உதவிக்கு இரந்தான்போலும் ! அப்பொழுது குடிமக்கள் செலுத்திய பணம் இரவு’ எனப் பெயர் பெற்றிருக்கலாம்.”

7. சமுதாய-குழுவரிகள்

வலங்கைச் சாதியினரிடமும், இடங்கைச் சாதியினரிட மும் பிற வகுப்பினரிடமும் ஒருவகை வரி வசூலிக்கப்

1. E. I. 7, p. 304; 510 of 1921. 2. A. R. E. 1917. 97; 1922, Para 43. 3. 255 of 1911. 4. 521 of 1920. - 5. K. A. N. சாத்திரி, சோழர், பக். 522, 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/72&oldid=573590" இலிருந்து மீள்விக்கப்பட்டது