பக்கம்:தமிழக ஆட்சி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சட்டம்-முறை-காவல்

79



வேட்டைச் சட்டம் முதலியன

உடுக்கையை ஒத்த கால்களை உடையனவும், மடிந்த காதுகளை உடையனவும் ஆகிய யானைக் கன்றுகள் முதலிய விலங்குகளின் குட்டிகளையும் சூல் கொண்ட பெண் விலங்கு களையும் வேடர்கள் வேட்டையாடார் என்று சேக்கிழார் கண்ணப்ப நாயனர் புராணத்தில் கூறியுள்ளார். இக்காலத் தில் விலங்குகளைப் பாதுகாக்கும் இத்தகைய சட்டங்கள் இருந்து வருகின்றன. சோழர் அமைச்சரான சேக்கிழார் இதனைக் கூறியிருத்தலால், சோழர் காலத்தில் இத்தகைய சட்டம் ஒன்று இருந்திருக்கலாம் என்று கருதுவது பொருத்த மாகும.

கொடிய விலங்குகளால் தமக்கும் தம் உடைமைகட்கும் திங்கு நேருவதாக வேடர், கண்ணப்பரின் தந்தையான வேட்டுவ அரசனிடம் முறையிட்டனர். அவன் குடிகளின் உயிருக்கும் உடைமைக்கும் தீங்கு வராமற்காப்பது தன் கடமை ஆதலால், கொடிய விலங்குகளே அழிக்கத் துணிந் Esrāīr. o.L&ulous flu Çift splb (Offences against person), a Lamudabul. Lisi ou Gi Dib (Offences against property) என்பவை நேராமற் காப்பது அரசின் கடமை என்று இன்றும் சட்டம் கூறுகிறதன்றோ?” இது முற்காலத்தும் வழக்கில் இருந்தது என்பது இதல்ை தெரிகிறதன்றாோ?

ஒருவர் அடைமானமாக வைத்த உடைமை பன்னிரண்டு ஆண்டுகள் வரையிலுமே அடைமானம் பெற்றவரிடம் இருத்தல் வேண்டும். அதன் பிறகு உரியவர்களிடம் எவ்விதத் தொகையும் கேட்காமல் உடைமையை உடைய

1. செ. 86 2. செ. 43 3. C. K. S. முதலியார், சேக்கிழார், பக் 50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/86&oldid=573604" இலிருந்து மீள்விக்கப்பட்டது