80
தமிழக ஆட்சி
வரிடம் ஒப்புவித்தல் வேண்டும் என்பது விஜயநகர ஆட்சியில் சட்டமாக இருந்தது.”
ஒருவரது அரசாங்கப் பணிக்காக வழங்கப்படும் இனம் நிலங்கள் அடைமானம் வைக்கவோ, விற்கவோ கூடாது. அங்ஙனம் செய்பவர், அரசத்துரோகிகளும் சமுதாயத்துரோகி களும் பெறத்தகும் தண்டனையைப் பெறுவர் என்று ஒரு கல் வெட்டுக் கூறுகின்றது.”
கி. பி. 17 - ஆம் நூற்றாண்டில் ஓர் ஊரைச் சேர்ந்த பிராமணர்கள் கூட்டங்கூடி, கன்னிகாதானமாகத் தம்முள் மணம் முடிக்கவேண்டும் என்றும், இதற்கு மாருக நடப்பவர் சாதிநீக்கம் செய்யப்படுவதோடு அரசனல் தண்டிக்கப்படுவர் என்றும் தீர்மானித்தனர் என்று ஒரு கல் வெட்டுக் கூறு கின்றது. இங்ஙனம் ஒர் இனத்தார் முடிவு சட்டமாகிறது. என்பது அறியத்தகும்.
நீதி மன்றங்கள்
அரசன் குடிகளுக்குத் தந்தையும் தலைவனும் ஆவான். எனவே, குடிகளின் குறைகளை விசாரித்து முறை வழங்குதல் அரசனது சிறப்புக் கடமையாகிறது. சங்க காலத்தில் வள்ளுவர் நடுவுநிலைமை என்னும் அதிகாரத்தால் நீதி: மன்றத்தார் கடமைகளை உணர்த்தியுள்ளார்; உலகத்து உயிர்கள் மழையை நோக்கி வாழும்; அதுபோலக் குடிகள் மன்னனது நெறி தவரு முறையை நோக்கி வாழ்வர். குடி மக்களுடைய குறையைப் பொறுமையோடு கேட்டு முறை. வழங்காத அரசன் தன்னைத்தானே அழித்துக்கொள்வான்’ என்பது வள்ளுவர் வாக்கு.”
1. 6 19 of 1917 2, 193 of 1916 3. 428 of 1887
4. அதிகாரம் 55, 2, 8.