உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

23. புடையான் தலைவன் கணக்கன் புரந்து எளுதிக்காத்து அறப்

24. பகஞ்செய்யக் கடவரால்

25. --- கு இறுக்கும்படிக்கு.... கல்வெட்டிக்

26. குடுத்தேன்.... ஸ்ரீ..

5) கொடிமரத்து சிறுநயினார்பள்ளிக் கல்வெட்டு

அரிகேசரி பராக்கிரம பாண்டியன் காலக் கல்வெட்டு (கி.பி. 1422-1463) துருக்கநயினாப் பள்ளியில் சிறந்த முறையில் விழாக்கள் நடத்த தென்காயல் மக்கள் எல்லோரும் மகிழ தொழுகை நடத்த அர்த்த மண்டபம் இடைநாழி, பெருமண்டபம், தண்ணீர்க் குளம் அமைத்து ஏற்ற திருப்பணிகளும் செய்யப்பட்டன. இவை அனைத்தும் அரிகேசரி பராக்கிரம பாண்டியனின் 25ஆம் ஆட்சியாண்டில் (கி.பி 1451) நடைபெற்றன.

தென்வாலி நாட்டுப் பொருநையாறு பாயும் பகுதியில் வடபுறம் உமரிக்காட்டு எல்லைக்கு உட்பட்ட மாத்தூர் கொடையாகக் கொடுக்கப்பட்டது. புன்னைக் காயலும் குறிக்கப் பெறுகிறது. அரசன் எல்லா வருவாயும் பள்ளிவாசலுக்கு அளிக்க ஓலை கொடுத்தான். இவ்வோலை கல்வெட்டாக வெட்டப்பட்டு செப்பேடும் கொடுக்கப்பட்டது. கொடை நிலங்களுக்கு வரிகளும் நீக்கப்பட்டன.

கொற்கை அதிகாரிகள் சிலர் கையொப்பமிட்டுள்ளனர். தென்காசிக் கோயில் திருப்பணிகள் செய்தவன் சிவபக்தனான இம்ன்னனே யாவான்.

கல்வெட்டு

சுபமஸ்து

1.

பூமிசை வனிகை மார்பினில் பொலிய 2. நாமிசை கலைமகள் நலமுற விளங்க

3. புயவரை மீது சயமகள் புணர

4.

5.

6.

கயலிணை உலகில் கண்ணெனத் திகழ்தரச் சந்திர குலத்து வந்தவ தரித்து

முந்தையர் தவத்து முளையென வளர்ந்து

7. தென்கலை வடகலை தெளிவுறத் தெரிந்து 8. மன்பதை புரக்க மணிமுடி புனைந்து

9.

சங்கர சரண பங்கயஞ் சூடி