உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

74. செஞ்சி மசூதி திருப்பணியில் சையது*

செஞ்சிக் கோட்டை மசூதிச் சுவரிலும் தண்ணீர்த் தொட்டி மத்தியிலும் இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன. அவை ஹிஜ்ரி 1130ல் (கி.பி. 1718) மசூதி கட்டப்பட்டதையும், ஹிஜ்ரி 1135ல் (கி.பி. 1723) தண்ணீர் விநியோகத்தை அதிகரிக்கத் தண்ணீர்த் தொட்டி கட்டியதையும் தெரிவிக்கின்றன. அவை பேரரசர் பரூக்கியர் ஆட்சியின்போது செஞ்சி ஆளுநராக இருந்த சையத் அவர்களால் கட்டப்பட்டன.

  • Annual Report on Epigraphy 307, 308 of 1939

Epigraphia Indo Moslemica 1938 P. 52