உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111

புலவர் செ. இராசு 161

86. துயிலிடக் கல்வெட்டுக்கள்

வரலாற்று ஆவணங்களில் இஸ்லாமிய சமயப் பெரியோர் களின் அடக்கத்தலங்களில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுக்களும் அடங்கும். கி.பி. 14ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் அடங்கிய அடக்கத் தலங்கள் முப்பதுக்கு மேல் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில பாரசீகம், அரபு மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் தமிழிலேயே கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிலவற்றில் தமிழ், அரபு இருமொழிக் கல்வெட்டுக்களும் உள்ளன.

காயல்பட்டினத்தில் உள்ள பெரிய பள்ளிவாசல், கொடிமரப் பள்ளிவாசல், ரெட்டைக்குளம் பள்ளிவாசல், கீழக்கரையில் உள்ள குத்பு செய்யது ஷஹீது ஒலியுல்லாஹ் என்னும் பழைய குத்பு பள்ளிவாசல், முகம்மது காசிம் அப்பா தர்கா என்னும் கடற்கரை பள்ளிவாசல், காட்டுப்பள்ளிவாசல் வேதானை ஜும்மா பள்ளிவாசல் என்னும் கூரைப்பள்ளிவாசல் ஆகிய இடங்களில் உள்ள அடக்கத் தலங்களில் தமிழ்க் கல்வெட்டுக்கள் உள்ளன.

பராசீக, அரபு மொழிக் கல்வெட்டுக்களில் ஹிஜ்ரி ஆண்டு முறை குறிக்கப்பட்டிருந்தாலும் தமிழ்க் கல்வெட்டுக்களில் தமிழ் ஆண்டு முறையே எழுதப்பட்டுளளது. எங்கும் கலியுக ஆண்டோ சாலிவாகன சக ஆண்டோ குறிக்கப்படாமல் கேரள மாநிலத்தில் பெரும்பான்மையாகவும், தமிழ்நாட்டில் சிறுபான்மையாகவும் பயின்றுவரும் கொல்லம் ஆண்டு முறையே எழுதப்பட்டுள்ளது. கொல்லம் 835

வருக்ஷம் விளம்பி வருக்ஷம் பங் குனி மாசம் 22 தேதி

கொல்லம் 6

44 ஆவது

வைகாசி மாதம் 17 தேதி

வியாளக் கிழமை

என எழுதப்பட்டுள்ளன. கொல்லம் ஆண்டுடன் 824 கூட்ட நேரான கி.பி. ஆண்டு கிடைக்கும். கொல்லம் 835 +824=கி.பி. 1659 ஆகும்.