உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராக 163

வெள்ளிக் கிழமை பகல் மரித்தார் புதன் கிழமை இரவு மரித்தார்

வியாழக் கிழமை காலை மரித்தார்

என இறந்த நேரம் குறிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான கல்வெட்டுக்களில் மரித்தார் எனவே யுள்ளது. ஒரு அடக்கத் கல்வெட்டில் “மவுத்தானார்” என எழுதப்பட்டுள்ளது.

பெண்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட இடங்களில் அவர்கள் ன்னாருடைய ‘மகளார்' என்று ‘ஆர்’ விகுதி கொடுத்துச் சிறப்புடன் குறிக்கப்பட்டுள்ளனர். பெண்களை 'நாச்சியார்` எனக் குறிக்கும் வழக்கும் இருந்துள்ளது. ஒரு கல்வெட்டில் ஒரு பெண் ‘பீபியார்’ எனக் குறிக்கப்பட்டுள்ளார். ஒரு கல்வெட்டில் ஒரு பெண் இன்னாருடைய மருமகள் (மருமத்தி) எனக் குறிக்கப்பட்டுள்ளார். வேலூரில் 1834ல் காலமான திப்பு சுல்தானின் மனைவி பேகம்பாதுஷா, மகள் ஃபாதிமா பேகம் ஆகியோர் அடக்கத் தலங்கள் உள்ளன (1834)

நல்லடக்கம் செய்யப்பட்டவரது தந்தை, தாத்தா பெயர் குறிக்கப்படுவது பெரும்பாலும் வழக்கம். சில கல்வெட்டுக்களில் பல தலைமுறைகள் குறிக்கப்பட்டுள்ளன.

காயல்பட்டினம் பெரிய பள்ளியில் 21.5.1581 அன்று அவதுல்

சுபாரு

நயினா முன்னோர்களாக,

நல்லடக்கம்

சையது அகமது நயினா

சேக் அவதுல்லா நயினா

சையது அகமது நயினா

சமால் நயினா

ஓசு நயினா

இஷுபு நயினா

அசன் நயினா

செய்யப்பட்டார். அவர்

ஆகியோர் வரிசையாகக் குறிக்கப்பட்டுள்ளனர். இன்னாருடைய மகன் இன்னார் எனக் குறிக்கப்பட்டுள்ளது.

ஷேக் அலி நயினார் என்ற செண்பகராம முதலியார்

என்பவரின் முன்னோராக,