உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.

164

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

சமால் நயினார்

சையது அகமது நயினார்

சமால் நயினார்

சையது அகமது நயினார் என்ற வீரபாண்டிய முதலியார் சாது நயினார்

என்பவர்கள் வரிசையாக குறிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு நல்லடக்கக் கல்வெட்டுக்களையும் நோக்கும்போது தாத்தாவின் பெயரைப் பேரனுக்கு வைக்கும் வழக்கம் இருந்தமை நன்கு புலப்படுகிறது. 'பெயரன்' என்ற சொல்லே ‘பேரன்' என ஆயிற்று என்பர்.

சையது அகமது நயினா அவர்கள் பேரன் பெயரும் சையது அகமது நயினா என்பதே. சமால் நயினா பேரன் பெயரும் சமால் நயினார் என்பதே. என்பதே. நயினார் என இரு மாதிரியாகவும் எழுதப்பட்டுள்ளது. சில இடங்களில் கிரந்த எழுதுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இபுறாகீம், இவுறாகீம் என்றும் அப்துல் அவ்துல் என்றும் பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளது.

பலருக்கு மரக்காயர் அல்லது மரைக்காயர் என்ற பெயர் இணைந்து வந்துள்ளது. சிலர் பெயர்களில் ‘கப்பல்’ என்ற சொல் பெயருடன் கொடுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மரபுப் பெயர்களின் இடையில் பலருக்கு,

இம்முடி செண்பகராமமுதலியார்

வீரபாண்டிய முதலியார்

செண்பகராம முதலியார்

அய்யா முதலியார்

நொளம்பாதராய முதலியார்

மார்த்தாண்ட மரக்காயர்

ஷோர முதலியார்

அய்வ முதலியார்

சேனாபதி இராசகண்ட கோபாலர்

வெட்டும் பெருமாள்

பெத்தனா மரைக்காயர் மழமரைக்காயர்

அப்பு மரக்காயர்

போன்ற சிறப்புப் பட்டப் பெயர்கள் 15, 16 ஆம் நூற்றாண்டு இஸ்லாமியப் பெரியவர்கட்கு வழங்கியிருப்பது மிகவும் சிறப்புக்குரியது. முதன்மையானவர் என்ற பொருளில் முதலியார் பட்டம் வழங்கப் பெற்றிருக்க வேண்டும். தமிழகச் சமுதாய