உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு & 165

வாழ்வில் அவர்கள் பெற்றிருந்த மிகு சிறப்பு இதன் மூலம் தெரிகிறது.

சேனாதிபதி,மன்னர், கட்டியார், செல்லக்குட்டி, நத்துக் கணக்கப் பிள்ளை, குட்டியார், மாப்பிள்ளை, இம்முடி, பெத்தணா என்ற பெயர்களும் ஆய்வுக்குரியவை. இப்பெயர்கள் அன்றைய மன்னர்களிடமும் சிற்றரசர்களிடமும், செல்வாக்குப் பெற்ற பாளையக்காரரிடமும் இஸ்லாமியப் பெருமக்கள் பெற்றிருந்த மிகு செல்வாக்கைக் காட்டுகின்றன.

கீழக்கரை காட்டுப்பள்ளிவாசலில் கி.பி. 1466ஆம் ஆண்டு கல்வெட்டும், கடற்கரைப் பள்ளியில் 1458, 1468, 1477, 1498, 1505, ஆம் ஆண்டு கல்வெட்டுக்களும், பழைய குத்பு பள்ளிவாசலில் 1603, 1614, 1659 ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்களும், வேதாளைப் பள்ளிவாசலில் 1687ஆம் ஆண்டுக் கல்வெட்டும் காணப்படுகின்றன. கடற்கரையில் முதலில் மக்கள் குடியேற்றம் தொடங்கி உள்பகுதி நோக்கிக் குடியேற்றம் படர்ந்ததை இக்கல்வெட்டுக்கள் காட்டுகின்றன.

மரக்காயர் அல்லது மரைக்காயர் பெயர் உள்ளவர்களே அதிகமாகக் காணப்படுகின்றனர்.

இஸ்லாமியர்களுக்கு வெட்டும்பெருமாள், மார்த்தாண்டன், கட்டியார், குட்டியார், சேனாபதி, இராசகண்ட கோபாலர் என்ற பட்டப் பெயர்கள் இருந்ததும் கல்வெட்டுக்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

வடக்கு தெற்காக அமைக்கப்பட்ட அடக்கத்தலங்களின் முகப்பில் பலகைக் கற்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் இருக்கும். வேதாளைக் கூரைப்பள்ளி அடக்கத் தலத்தில் மட்டும் அடக்கத் தலத்தின் 12 x 10 அடி அமைப்பில் செவ்வக வடிவில் ஒரு கல் மண்டபம் காணப்படுகிறது (கி.பி. 1687). மாதிரிக்கு ஒரு சில காட்டப்பட்டுள்ளன.

அ) கீழக்கரை கடற்கரைப் பள்ளிவாசல் (கி.பி. 1499) கொல்லம்

674 ஆண்டு

மார்களி மா

தம் 5 தேதி வெள்