உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

வடமஞ்செட்டி, கோவிந்தசெட்டி, பொக்கிஷக் கொல்லர் வகையில் கரியநாயக்கன் குள்ள சேர்வைக்காரன் முத்துரங்கயன், வெங்கிட்டநாயக்கன், பழ்ழர் வகையில் வீரபத்திரப்பண்ணாடி, குட்டிப்பன்னாடி, யிருளப்பப்பன்னாடி, சோணப்பண்ணாடி மாதாரி வகைகள் குப்பமாதாரி, ரங்கமாதாரி, சின்னமாதாரி... மாதாரி... யிவர்கள் முதலாகிய இருபத்து நாலு நாட்டிலுள்ள யிடங்கையாருக்கு செங்குந்த முதலிமார் படையாச்சிக் கவுண்டர் அவர்கள் பஞ்சாளத்தார் பழ்ழர் மாதாரிகள் யிடங்கையோருகளும் வெற்றிப்பட்டையம் கொடுத்த விவரம்.

விசயமாநகரத்தில் மாரியம்மன் திருநாளிலே யிடங்கை யாருக்கும் வலங்கையாருக்கும் யித்தண்டத்தாருக்கும் தண்டம் வந்து வலங்கைக் கவரைச் செட்டியாகிறவன் இடங்கையாருக்குள்ள சிகப்பு கத்தியும் விருதும் ம் நமக்குச் செல்லுமென்று சொல்லிக்கொண்டு யித்தண்டத்தாரும் வழக்காடி ஆறு மாதம் ஒருவருசக் காலமாய் யித்தண்டத்தாரும் சாதியும் கூட்டிக்கொண்டு வழக்காயிருந்த யிடத்தில் மகாறாயர் றாயஸ்த்திரி திவான் கிரி மீரே சாயபு அவர்கள் சீமை விசாரணைக்கு விசயமங்கலத்திற்கு வந்திருந்தயிடத்தில் வலங்கை கவரை தேசம் பெத்திசெட்டி, சேடச்செட்டி, தேவாங்கச்செட்டி, சாணார் முதலான வலங்கைச் சனமும், யிடங்கைக்குச் சேர்ந்த முதலிமார், படையாச்சிக் கவுண்டரவர்கள், ஆசாரியள் யித்தண்டத்தாரும் வந்து வழக்குச் சொன்னபடியினாலே யித்தண்டத்தாரை பூருவந் பூருவந் தீர்ந்த பட்டையங்கள் வாங்கிக் கொண்டு திருப்பூருக்கு வரச்சொல்லிப் போட்டுப் போனபடியினாலே அதே மேரைக்கு யித்தண்டத்தாரும் திருப்பூருக்கு வந்து பட்டையங்கள் வாசித்துப் பார்த்தயிடத்தில் யிடங்கையார் பட்டையத்தில் பூருவம் காஞ்சிபுரத்தில் தீர்த்த பிரகாரத்துக்கு கத்தியும் பஞ்சவர்ண விருதும் அத்தநாரிக் குஞ்சமும் பகல்த் தீவட்டியும் பஞ்சவர்ணப் பாவாடையும் தெருமேல் மிரவணையும் அன்னமேல் மிரவணையும் குதிரைமேல் மிரவணையும் பல்லக்கின்மேல் மிரவணையும் செல்லுமென்று யிருந்தது.

வலங்கைக் கவரைச்செட்டியள் கொண்டுவந்த பட்டையத்தில் வலங்கை சனத்துக்கு வெள்ளைக்குடை வெள்ளை வெண்சாமரம் வெள்ளைவெட்டுப் பாவாடையும் வலங்கைச் சனத்துக்குச்