உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 189

செல்லுமென்று யிருந்தது. வலங்கைய்யர் கொண்டுவந்த பட்டையத்தில் யிடங்கையார்க்குச் செல்லும் விருது பஞ்சவர்ண விருதும் பஞ்சவர்ணக் குடையும் பகல்த்தீவட்டியும் கவரைச்செட்டி- கொண்டு வந்த பட்டையத்திலே யிருந்தபடியாகவே பஞ்சாயத்தாரு... செட்டி வாலிசெட்டி வீரிசெட்டி முதலான பலபட்டறையார் முன்பாகத் தீர்ந்து வலங்கையான்... கொண்டு வந்த பட்டையத்திலே யிடங்கையாருக்குச் சகல விருதும் செல்லுமென்றுயிருக்கிறபோது நீ யில்லாது குமார்க்கம் சண்டை பண்ணிக்கொண்டு யிருக்கக் காரணமென்னவென்று வலங்கைக் கவரைத் தேசம் பெத்திசெட்டியைப் பிடித்து அங்கை செய்து விலங்குபோட்டு அரமனைக்கு ரண்டாயிரத்து நானூறு பொன்னு அவுதாரம் வாங்கி வச்சார்கள். யிடங்கையார் கிட்ட வெற்றிக் காணிக்கு ஆயிரத்தி அயினூறு ரூபா வாங்கி வச்சார்கள். வெற்றிப் பட்டையமுங் குடுத்தார்கள். மிரவணையும் பண்ணி வச்சார்கள். இதெ வெற்றிப்பட்டையமாக அனைவரும் கூடி எழுதிக் கொடுத்த வெற்றிப் பட்டையம். இதெ வெற்றிப்பட்டையமாக கட்டிக் கொள்ளவும்.

விசயாபுரிக்கெடியில்

சிரஷ்த்தார்

எழுதினவர் வெங்கிட்டய்யன் அவர்கள் எழுதினது. கமாச்சியம்மன் துணை. அந்தியூர்க்கச்சேரி ராஜஸ்ரீ திவான் கிரிமீரே சாயிபு அவர்கள், கச்சேரி சிரஷ்த்தார் இராமறாயர் அவர்கள், அமுதல்லிக்கான் சாயிபு அவர்கள், விசயாபுரித்துக்கிடியில் அமலுதாரர் மம்முதல்லி சாயபு அவர்கள், சேணபாக அன்னய்யன் அவர்கள், சிரஷ்த்தார் வெங்கிட்டய்யன் அவர்கள், அரச்சலூரு அமுலுதாரர் ராயசம் சுபானு கான் சாயபு அவர்கள், சிரஷ்த்தார் கல்லய்யன் அவர்கள், சேனபாகக் கோபாலகிஷ்ட்டப்பயன் அவர்கள், துடுப்பூதி அமுலுதாரர் மீரான் சாயிபு அவர்கள், ஊத்துக்குளி அமுலுதாரர் சாலீ சாயபு அவர்கள், சிரஷ்த்தார் சேஷகிரி அய்யன் அவர்கள், சேனபாக சுப்பய்யன் அவர்கள், குரிப்புநாட்டுக் கவுண்டர்கள் அனுமந்த கவுண்டன், பொன்னைய கவுண்டன், அரசப்பக் கவுண்டன், குப்பண கவுண்டன், பட்டக்காரக் கவுண்டன், நாகப்பக் கவுண்டன், பொன்னைய கவுண்டன், றாமைய கவுண்டன், துடுப்பூதி வாரணவாசிக் கவுண்டன், சின்னத்தம்பிக் கவுண்டன், ராமைய கவுண்டன், ஊத்துக்குளி சரபண கவுண்டன்