உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

பெரியதம்பிக் கவுண்டன், முத்துக் கவுண்டன், செல்லைய கவுண்டன், திருப்பூரு பொன்னைய கவுண்டன், முதலிபாளையம் முத்துக் கவுண்டன், அந்தியூர் காளியண கவுண்டன், குன்னத்தூரு சீரங்கக் கவுண்டன்... கவுண்டன், ஆதியூரு முத்துவேலப்பக் கவுண்டன், ஆவுடையாக் கவுண்டன், கருப்ப கவுண்டன், திங்களூரு குள்ள கவுண்டன், செவியூரு ஈஸ்வரமூர்த்திக் கவுண்டன் இவர்கள் முதலாய் இருபத்தி நாலு நாட்டுக் கவுண்டர்கள் கையொப்பம் இந்தப் பட்டையத்தை யாதாமொருவர் இல்லைப் பொய்யென்று சொன்னவர்,

கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற தோஷத்திலே போகவும், தெய்வ தத்துவாராதி திருவிழக்கதையை நிந்தனை பண்ணின தோசத்திலே போகவும், மாதா பிதாவுக்கு வஞ்சகம் பண்ணின தோஷத்திலே போகவும். காமாச்சியம்மன் துணை உ.

  • கொங்குநாட்டுச் சமுதாய ஆவணங்கள். செ.இராசு. தமிழ்ப்பல்கலைக்கழக

வெளியீடு (1991) பக் 208-212