உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 191

94. வேலூர் துலுக்கப் பிரபுக்கள் வம்சாவளி*

சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசின் கீழ்த்திசை சுவடி நூலகத்தில் இந்த ஆவணம் உள்ளது.

வேலூர்க் கோட்டையில் குலாமல்லிகான் ஆட்சி செய்ததும், அவர் மக்கள் நால்வர் பாக்கரல்லிகான், தோஸ்த்தல்லி, சாதகல்லி, அக்பர் முகம்மதலி என்ற நால்வரும் தந்தைக்குப் பின் ஆட்சி புரிந்ததும்.

முகம்மதலி காலத்தில் இந்த ஆவணம் எழுதப்பட்டிருக்க வேண்டும். அவர் ஆட்சிச் சிறப்பு வருணிக்கப்படுகிறது. சிலு நாயக்கனின் தொல்லையும அவர் முகம்மதலி படையால் வெற்றிகொண்ட விவரமும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆவணம் கவி வடிவில் வெள்ளிக்கந்தப்பய்யர் என்பவரால் எழுதப்பட்டது என்ற விபரமும் கூறப்பட்டுள்ளது. ஆவணம்

திருவளர் செம்பாவை வாழும் செல்வ விநாயகன் திருவடியை மருவிய தணிகைமலை வாழும் மயில்வடிவேலர் திருவடியை

பரந்திவெள்ளிமலை காளத்தி பரன் அரவிந்தன் திருவடியை வறந்தியுள முடியே வளர்த்த மார்க்கசகாயர் திருவடியை

அண்ணாமலை பாகன் நாயகி உண்ணாமுலையார் திருவடியை பண்ணார் படைவீட்டில் வாழும் பரஞ்சோதி எல்லம்மாள் திருவடியை

திரிசந்தி வேளையிலே இவர்களை

சிந்தையிலே மனந்தொழு தேத்தி அரிச்சந்திரன் மனையாள் தனஇவரால் ஆகிற காரியம் என்னவென்றால்

கல்விகல் லோவையெல்லாம்

கனகமலை போல