உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

207

6) ரூ 1... முக்குணாமலைப்பட்டி சின்னயா ராவுத்தரிடத்தில் ரூ நான் சவளி வாங்கி யிருந்ததில் யாருக்கு கொடுக்க வேண்டிய துகை 1

7) தங்களே யேத்துக் கொண்ட வகையில் ரூ 2 வகை நாளது தேதியில் நான் ரொக்கம் வாங்கின வகையில் ரூ (3/8) ஆக வகை 4ம் நாளது உ தேதியில்

பின்பக்கம்

1) கணக்குத் தீர்ந்து தங்களுக்கு நான்கொடுக்க வேண்டியது ரூ 6 யிந்த ரூபாயி ஆறுக்கும் 1 ரூ வட்டி வட்டிகூட்டி நிண்ணை நாளைக்கி யேருண

2) வட்டியும் முதலும் உடையாற் வேணும்போது குடுத்து யிந்தப் பத்திரத்தை வாங்கிக் கொள்வேனாகவும், யிற் பத்திரத்துக்குச் செல்லான வி

3) ந்தப் பத்திரத்தில் தானே வரவு வயித்துக் கொள்ளுகிற யிந்தப் பத்திரத்துக்கும் யிதையே வகைச் செல்லுச் சொன்ன போதிலும் யேத்துககொ

4) ள்ளத்தக்கதில்லை யிந்த படிக்கி சம்மதிச்சு வட்டிக்கடன் பத்திரம் யெழுதிக் கொடுத்தேன் செல்லக்குட்டி சம்மதி விலாக்குடியிலிருக்கும் ஆறுமுக னா

5) டாவி மகன் ஆண்டியப்பன் அறிவேன். விலாக்குடியி லிருக்கும் ராம நாடார் மகன் தனுக்கோடி நாடார் அறிவேன். யிந்த வட்டிக் கடன் பத்திரம் யெழு.

6) தினது விலாற்குடி பறச் செல்வன் மகன் கருப்பன் கய்யெளுத்து யிந்த பத்திரத்துக்கு சாதாண்ட கூலி... ரூ விட்டுப் போனதுனால சாகண்டு சேர்த்து எழுதி இருக்குது.

7) செல்லக்குட்டி சம்மதி

முன்பக்கம்

நெல்லு லாபக் கடன் பத்திரம் கி.பி. 1898

1) வருஷம் 1898 அக்டோபர் மாதம் 19 தேதி புதுக்கோட்டை சமஸ்தானம் டிஸ்திரிக்கட்டு டவுன் தெற்கு ராஜவீதி பழய...யில் சந்துக்குள்ளிருக்கும் காஜி அப்துல்காதர் லெவை சாயபு அவர்.