உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

27

10. சாததுல்லாகான் காசி- இராமேசுவரம் யாத்திரை

பனமலை

பீஜப்பூர் சுல்தான் சார்பில் செஞ்சியில் ஆட்சி செய்தவர் நவாபு சாததுல்லாகான் சாயபு. அவர் காசி யாத்திரை சென்று அதன் தொடர்ச்சியாக இராமேசுவரம் செல்லும்போது விழுப்புரம் வட்டத்தில் உள்ள தாலகிரீசுவரர் கோயிலில் வணங்கினார். பனமலைக் கோயில் முன் மண்டப வாயிற்படியில் உள்ள அவர் கல்வெட்டில் அவர் தன்னை ‘மகாமண்டேலசுவர ராஜாதிராஜ ராஜபரமேசுவரன்' என்று குறித்துக் கொண்டுள்ளார்.

சக வருடம் 1596 (கி.பி. 1674) ஆனந்த வருடம் மாசி மாதம் 11ஆம் தேதி வெள்ளிக் கிழமை அவர் பனைமலைக் கோயிலுக்குச் கொடையும் கொடுத்துக் கல்வெட்டு பொறித்துள்ளார். பின்னர் இவர் 1710ஆம் ஆண்டு ஆர்க்காடு நவாப் ஆக்கப்பட்டார். இவர் சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வேப்பத்தூர் ஆகும்.

  • Annual Report on Epigraphy 618 of 1915