உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

33

இடம்

காலம்

செய்தி

15. சூடிக்கொடுத்த நாச்சியார் படிமம் தந்த பரூக்சீயர்*

-

-

-

கல்வெட்டு

வேலூர் மாவட்டம், வாலாஜாப்பேட்டை வட்டம், சோளிங்கர் பக்தவத்சல சுவாமி கோயில் முதற் பிரகாரம் வடக்குச் சுவர்.

2.5.1716; சாலிவாகன ஆண்டு 1637 துர்முகி வைகாசி 4. சோளிங்கர் பக்தவத்சலசுவாமி கோயிலில் ஆண்டாள் படிமம் டமம் இல்லை என்று வேண்டிக்கொள்ள மன்னர் பரூக்சீயர் ஆணையால் படிமம் செய்யப்பட்டு, சுவாமியும் திருவீதியுலா எழுந்தருளச் செய்யப்பட்டது.

1. ஸ்வஸ்திஸ்ரீமந் மகாமண்டலேஸ்வர ராஜாதிராஜ ராஜ பரமேஸ்வர ராஜப்பிரதாப முகலாயி பரூக்சீய சாயிபு பாச்சா அவர்கள் பிருத்விராஜ்யம் பண்ணியருளாநின்ற சாலிவா

2. கன சகாப்தம் 1637க்கு மேல் செல்லா நின்ற துன்முகி வருஷ வைய்யாசி மாதம் 4 தேதி சப்த்தமி புத வார திருவோண நக்ஷத்திரமும் பெத்த யிந்த னாள் ஸ்ரீ கெடி காசலம் அக்காரக் கன்னி தக்கான் ஸ்ரீகாரியத்துக்குக் கர்த்தராகிய கந்தாடை குமாரர் தொட்டையாச் சாரியார் அவர்கள் முத்திரைக்கு கற்தர் ஆன

3. பக்ஷிராஜபரிகரம் இவேளைவாளும் திருக்கடிகை ஸ்தானத் தாரும் பாறுபத்தியம் வெங்காஜி பண்டிதரும் உபாதானம் துவாதெசி திருவேங்கட அய்யங்கார் குமாரர் திருவளூரப்பய்யங்கார் மண்டபத்துக்குப் பொலியூட்டு பண்ணிக் குடுத்தபடி ஸ்வாமி தக்கான் சன்னதியில் சூடிக்குடுத்த நாச்சியார் யில்லபாதபடி யினாலே இந்த சூடிக்கு

4. டுத்த நாச்சியாரை ஏறியருளப்பண்ணி சம்ரோக்ஷணை பண்ணிவிக்கத் தக்கதாக தேவரீர் சங்கல்ப்பித்தருளின படியினாலே நாங்களனைவரும் சம்மதிச்சு உங்கள் உபதான மண்டபத்துக்கு எங்கள் கோயிலொ டொத்தாயி கிரி பிரதக்ஷணத்துக்கு பெருமாளை எழுந்தருளப்பண்ணி படியுங் கைக் கொண்டு