உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 53

31. 'அஞ்சினான் புகலிடம்' அமைத்து வரி நீக்கிய நவாபு*

பேரரசர் ஔரங்கசீப் பெரும்படை ஜரல்ஃகார்கான் தலைமையில் செஞ்சிமீது படையெடுத்தபோது, மக்கள் உயிருக்கும் பயந்தனர். அவர்கள் எல்லாம் 'நஞ்சனபேட்டை' என்னுமிடத்தில் பாதுகாப்பாகத் தங்கலாம் என்று கூறி அவ்வாறு பாதுகாப்பு அளித்தவர் சாததுல்லாகான்.

'காசாய வர்க்கக் குடிகள்' தலைக்கு நான்கு பணம் அளிக்க வேண்டும் என்றும், 'உழுகுடிகள்' கொடுக்க வேண்டிய வரியில் முக்கால் பங்கு அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

பீஜப்பூர் சுல்தான் அலி அடில்ஷா நெசவாளர்கட்கும், மளிகை வியாபாரிகட்கும் உள்ள வரியை நீக்கினார். சுல்தானின் அதிகாரி கானி ஆஜம்கான் சாயபு 12 ஆண்டுகட்கு ‘சிற்றாலம்' முதலிய வரிகளை நீக்கினார்.

  • Annual Report Epigraphy 617,619 of 1915